Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
பொது
ஓர் எச்சரிக்கை! - அபிகெய்ல் ஆடம்ஸ்
ஜூலை மாதம் நாலாம் நாள்
மீண்டும் காட்டிலிருந்து நாட்டுக்கு!
சுகமான காத்திருத்தலும் ஒரு கப் காபியும்.....
- சரவணன்|ஜூலை 2001|
Share:
Click Here Enlargeஆந்திராக்காரரான ஸா·ப்ட்வேர் இன்ஜினி யரான சசி சிமாலாவுக்கு வித்தியாசமான ஆசை ஒன்று தோன்றியது. சசி சிமாலா எழுபதுகளில் அமெரிக்கா பக்கமாக நகர்ந்து போனவர். ஆரம்பத்தில் நண்பர்களுக்குத் துணையாய் ஸா·ப்ட்வேர் பிஸினஸில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். சொந்தக் காலில் நிற்க நினைத்து தனக்கென ஒரு நிறுவனத்தையும் தொடங்கி நடத்தியிருக்கிறார்.

இது அவரின் நதிமூலம். கம்யூட்டர் பிஸினஸ் போரடித்துப் போனதோ என்னவோ வித்தி யாசமாக எதையாவது விற்க வேண்டுமென்று எண்ணியவருக்கு காபி கண்ணில் தட்டுப் பட்டது. (குடிக்கிற காபியேதான்!) அப்புறம் என்ன 1991 ஆம் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து காபியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டார். யோசித்து யோசித்து முடிவுக்கு வந்தவராய், 'Qwiky's pub' என்கிற மையத்தை சென்னையில் 1991 அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பித்தார்.

அமெரிக்காவில் வசித்துவந்த ஆந்திராக் காரருக்கு சென்னை எப்படி கண்ணுக்குத் தட்டுப்பட்டது? ஆரம்பத்தில் தன்னுடைய தாய்நாடான இந்தியாவிலேயே தன்னுடைய பிஸினஸைத் தொடங்க வேண்டுமென்ற தாகம் மட்டுமே காரணம். சென்னை என்பது இந்தியாவின் அனைத்துக் கலாச்சார ஊடுருவல் களையும் எளிதாக உள்வாங்கி ஆதரவு தெரிவிக்கும் இடம் என்பது தெரிந்த செய்திதான். அதனால் அவருடைய ஆபரேஷ னின் தலைமையிடம் சென்னையாக இருந்ததில் வியப்பில்லை.

அது என்ன சாதாரண காபிக் கடைதானே என்று இதை ஒதுக்கி விட முடியாது. இந்தக் காபி 'pub'ற்கென தனியான நோக்கங்களும் வரலாறும் இருக்கிறது. இந்த வகைக் கடைகள் இத்தாலி மற்றும் அமெரிக்கன் ஸ்டைல் கடைகள் என்கிறார்கள். இந்தக் கடைகளில் பணிபுரிபவர்கள் சர்வர் கள் கிடையாது. அவர் கள் 'பாரிஸ்டாஸ்' (Italian for Bar tendars) என்றே அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குச் சீருடை என்று தனியாக எதுவும் கிடையாது. காபி குடிக்க வருபவர்களைப் போலவே இவர்களும் காபி வழங்க வந்தவர்கள் அவ்வளவுதான். பாரிஸ் டாஸை நம்மால் சொடக் குப் போட்டு அழைத்து விட முடியாது. சொடக் குப் போட்டு அழைக்க முடியாதபடியான தோற் றம் அவர்களுடையது.

உலகத்தில் தத்துவம் இல்லாத இடமென்று ஏதாவது இருக்கிறதா? 'Qwiky's க்கும் தத்துவம் இருக்கிறது. நாங்கள் காபி மட்டும் கொடுப்ப தில்லை. காபி குடிக்கும் அனுபவத்தைத் தருகிறோம் என்கிறதே அவர்களுடைய தலையாய தத்துவம். உங்களால் எத்தனை வெரைட்டியில் காபி தயாரித்து விட முடியும்? எங்களால் முப்பதுக்கும் மேற்பட்ட வெரைட்டியில் காபி தயாரிக்க முடியும் என்கிறார்கள் கூலாக. ஆமாம் இங்கு ஜில்லென கூலாகவும் காபி கிடைக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள், இளைஞிகள் என அனைத்துத் தரப்பினரின் சுவையையும் அறிந்து அதற்கேற்றாற் போல காபியைத் தயாரித்துத் தருவதாகச் சொல்கிறார்கள்.

'Qwiky's குரூப்பின் துணைத் தலைவர் எட்வின் பால், "Qwiky's வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கிறது. இங்கு வந்த பின் வாடிக்கையாளர்கள் அவர்களது நண்பர்களுக் காகக் காத்திருக்கலாம். அந்த நாளின் இறுதி நேரத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கிற இடம். இது வெறும் கடை மட்டும் அல்ல. இது நண்பர்கள் உறவினர்கள் கூடும் இடம். இங்குள்ள போர்டில் நீங்கள் உங்களது விருந்தினருக்கான செய்தியை எழுதி வைத்து விட்டுச் செல்லலாம். இது படிப்பதற்கான இடமும் தான். ஏராளமான பத்திரிகைகள், புத்தகங்கள் காத்திருக்கும். நீங்கள் உங்களின் நண்பர்களுக்குக் காத்திருக்கும் போது இவைகளைப் பயன்படுத்தலாம். காபி குடித்ததினால் போரடித்து விட்டதா? சுற்றிப் பார்க்க வாழ்த்து அட்டைகள், பொம்மைகள், டி.சர்ட் போன்றவைகளை விற்பனை செய்யும் கடைகளைப் பயன்படுத்தலாம்" என்று 'Qwiky's ஐ பற்றி வரிக்கு வரி கவிதையாய் அறிமுகப்படுத்துகிறார்.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம். Qwiky's ன் ஸ்பெஷல் 'பெல்' (Bell). இந்தப் பெல் சுத்தமான மெட்டலால் ஆனது. வரும் போகும் விருந்தாளிகள் இதை அடித்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தலாம். அது மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள உந்தித் தள்ளுகிறது.
Click Here Enlargeஇந்தப் பெல்லின் மகத்துவம் பற்றி சசி சிமாலா சொல்கிறார். "இந்த பெல் ஒரு கான் செப்ட். வாடிக்கையா ளர்களின் எதிர்வினை யைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. அக்டோபர் 1999 ஸ்டெர்லிங் ரோட்டிலுள்ள pub ல் இதைப் பொருத்துகிற போது இந்த அளவு வரவேற்பு இருக்கு மென்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. இந்தப் பெல்லைப் பயன் படுத்து கிற தருணம் ஒரு மகிழ்ச்சியான தருணம்"

Qwiky's pub மட்டுமின்றி, 'Qwiky's Coffee Island (Shop in shop concept), Qwiky's காபி kiosk போன்ற கான்செப்ட்டுகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பாரத் பெட்ரோலிய வளாகங்களில் Qwiky's காபி kiosk களை அமைப்பது குறித்துப் பேச்சுவார்த் தை நடத்தி அனுமதியும் பெற்றிருக்கிறார்கள். இதன் மூலம் Qwiky's காபி பரவலான பொது மக்களையும் சென்ற டையும் என்று பெருமை யாகச் சொல்கிறார்கள்.

Qwiky's இதுவரை 3,50,000 கப் காபி விற்றுள்ளது. அவர்கள் திட்டமிட்டதை விட இது அதிகம். Qwiky's காபி கலாச்சாரத்தை இந்தியாவில் பரவலாக்கியே தீருவது என்ற முடிவோடுதான் களத்தில் குதித்திருக்கிறார்கள். இதுவரை சென்னை, ஹைதரபாத், டெல்லி போன்ற இடங்களில் கிளை நிறுவனங்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை கதீட்ரல் ரோடு, நெல்சன் மாணிக்கம் ரோடு, கோடாம்பாக்கம் ஹைரோடு, வெங்கட் நாராயணா ரோடு, செயின்ட் மேரீஸ் ரோடு போன்ற இடங் களில் கிளை நிறுவனங் கள் செயல்படுகின்றன.

மற்ற ஹோட்டல்களில் இருக்கை வசதிகளைப் பொருத்த வரையில், அவர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்து வைத்தி ருந்த நிலையிலே நாமும் பொருந்திப் போக வேண்டும். ஆனால் இங்கு அது மாதிரியான ஏற்கனவே திட்டமிடப் பட்ட நிலை கிடையாது. நம்முடைய வசதிக் கேற்ப இருக்கைகளை மாற்றிப் போட்டுக் கொள்ளலாம். நடந்து, அமர்ந்து, படுத்து எப்படி வேண்டுமானாலும் பருகலாம். இது அவர்களு டைய சுதந்திரத்தைப் பொறுத்த விசயம் என்பதை நாங்கள் உணர்ந்தேயிருக் கிறோம் என்கிறார்கள் நிர்வாகிகள்.

நிர்வாகிகளின் இந்த வகையான மனநிலைக்கு ஆதரவு பெருகிக் கொண்டேதான் இருக்கின் றது. "தொடர்ந்து இளைஞர்களின் ஆதரவு எங்களுக்குக் கிடைக்கிறது. குறிப்பாக இங்கு வருபவர்களில் அறுபது சதவிகிதம் பேர் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். வயதானவர்களும் வருகிறார்கள். வயதானவர்கள், இளைஞர்கள், இளைஞிகள் என அனைத்துத் தரப்பினரும் கூடும் திருவிழா இது".

Qwiky'sன் அடுத்த கட்ட நடவடிக்கை? இந்தியா முழுவதுமாக 55 காபி pub களையும் 85 காபி ஐலேண்டுகளையும் 100 காபி Kisok களையும் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அமைக்க வேண்டுமாம்.

நோக்கங்கள் இருக்கட்டும். கண்டிப்பாக ஆதரவு கொடுக்கத்தானே இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். அதுசரி இவ்வளவு நேரம் காபியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததால், அதன் விலை பற்றி சொல்ல மறந்துவிட்டது. விலை நம்மூர் சரவணபவன் போலெல்லாம் இல்லை. Qwiky's காபியின் விலை ரூபாய் எழுபதுக்கும் மேல். நீண்ட நேரம் காத்திருப் பவர்களைப் பற்றிக்கூட கண்டு கொள்வதில்லை என்பதால், இளைஞ, இளைஞிகள் இங்கு படையெடுத்துத் தங்களுக்கானவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். அப்படியே Qwiky's காபிக்காகவும் காத்திருக்கிறார்கள். காத்திருத் தல் சுகமான அனுபவம் தானே? ஒன்று நமக்காக யாராவது காத்திருக்க வேண்டும். அல்லது நாம் யாருக்காகவாவது காத்திருக்க வேண்டும். வேறென்ன இருக்கிறது வாழ்க்கையில் சுவாரசியமாய். Qwiky's காபி போல்...

சரவணன்
More

ஓர் எச்சரிக்கை! - அபிகெய்ல் ஆடம்ஸ்
ஜூலை மாதம் நாலாம் நாள்
மீண்டும் காட்டிலிருந்து நாட்டுக்கு!
Share: 
© Copyright 2020 Tamilonline