Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
நீதிமன்ற விசித்திர கேள்விகள்
- திருநெல்வேலி விஸ்வநாதன்|ஜனவரி 2002|
Share:
இங்கு காணப்படும் கேள்விகள் அமெரிக்க நாட்டு வழக்கறிஞர்களால், நீதிமன்றங்களில் சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டனவாகும். இவை அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. நாட்டிலேயே மிக அதிகமான வருமானம் உடைய வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளையும், அதற்கான பதில்களையும் படித்து ரசியுங்கள்.

கேள்வி : அப்புறம் என்ன நடந்தது?
பதில் : அவன் கூறினான். ''நீ என்னை அடையாளம் காட்டிவிடுவாய். ஆகையால் நான் உன்னை கொல்லப் போகிறேன்''
கேள்வி : அவன் உன்னை கொலை செய்தானா?
கேள்வி : போரில் இறந்தது நீங்களா அல்லது உங்கள் சகோதரரா?
கேள்வி : இப்போது உங்களுக்கு ஒரு புகைப்படத்தை காண்பிக்கப் போகிறேன். அதை அடையாளம் தெரிகிறதா என்று கூறுங்கள்.
பதில் : என்னுடைய புகைப்படம்தான் அது
கேள்வி : அதை எடுக்கும்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா?
கேள்வி : திருமதி ஜான்ஸன், உங்களது முதல் திருமணம் எவ்வாறு முடிந்தது?
பதில் : மரணத்தில்
கேள்வி : யாருடைய மரணத்தில்?
கேள்வி : நீங்கள் எவ்வளவு மாதம் கர்ப்பம் என தெரியுமா?
பதில் : இந்த நவம்பர் 8ம் தேதி 3 மாதமாகிறது
கேள்வி : அப்போது கருத்தரித்த தேதி ஆகஸ்ட் 8 ஆகிறது இல்லையா?
பதில் : ஆம்
கேள்வி : அந்த சமயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
கேள்வி : திருமதி ஜோன்ஸ், உங்கள் மனநிலை கட்டுப்பாட்டில் உள்ளது என நம்புகிறீர்களா?
பதில் : ஒரு வகையில் நம்புகிறேன்.
கேள்வி : எத்தனை தடவை நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்கள்?
கேள்வி : அவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. சரியா?
பதில் : ஆம்.
கேள்வி : எத்தனை ஆண்கள்?
பதில் : ஒன்றுமில்லை.
கேள்வி : அப்போது அவைகள் பெண்களோ?
கேள்வி : அது என்ன என்று உனக்குத் தெரியாது. அது எப்படி இருந்தது என உனக்குத் தெரியாது. ஆனால் அதை விவரிக்க முடியுமா?
கேள்வி : அந்த படிக்கட்டுகள் கீழே அடித்தள மட்டத்திற்கு செல்கின்றன என கூறினாய் இல்லையா?
பதில் : ஆம்
கேள்வி : அந்த படிக்கட்டுகள், அவை மேலேயும் செல்கின்றனவா?

படித்து ரசித்து அனுப்பியவர்: திருநெல்வேலி விஸ்வநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline