Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
22 ஆம் வயதில் மன்றம் - ஓர் அலசல்
விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய தமிழ் இசை விழா
'பாவாணர்' நூற்றாண்டு விழா & 15வது தேசிய தமிழ் மாநாடு
வாழ்த்துக்கள்
- |ஆகஸ்டு 2002|
Share:
Click Here Enlargeசிவா சேஷப்பன் கணினி மென்பொருள் பொறியாளராகத் தொழில் புரிந்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பௌதீகம் (physics), விண்ணியல் (astronomy, cosmology) துறைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. கல்லூரி மேன்படிப்பில் வானொலி விண்ணியல் (radio astronomy) துறையில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருக்கிறார். பள்ளி நாட்களில் மேடை நாடகங்களில் நடித்திருக்கும் இவருக்கு விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் முதன் முறையாக வட அமெரிக்காவில் பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மேடையேற்றம் செய்த போது சகுனியாக நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. சமூக சேவைகளில் ஈடுபாடுள்ள இவர், தொடர்ந்து ஐந்து வருடங்களாக சான் ·பிரான்சிஸ்கோ எய்ட்ஸ் வாக் (San Francisco AIDS Walk)-ல் பங்கெடுத்துக் கொண்டு இருக்கிறார். சுஜாதா, ஐஸக் "ஸிமோவ் போன்ற எழுத்தாளர்களை விரும்பிப் படிக்கும் இவர், தனக்கும் விஞ்ஞான அடிப்படையில் சிறுகதைகள் (science fictions) எழுத விருப்பம் என்று பயமுறுத்தி வருகிறார்.
2003-ம் ஆண்டு விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இவர் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் தமிழ் இணைய மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவிலும் பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருக்கிறார். மாநாட்டின் கண்காட்சி மையத்தின் தலைவராக (Director of Exhibition hub) செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த மாதம் வெளியான அருண் மகிழ்நன், முத்து நெடுமாறன் பேட்டியை திரு. குமார் குமரப்பனுடன் இணைந்து நடத்தி, தென்றலுக்காகத் தொகுத்து அமைத்தார்.
More

22 ஆம் வயதில் மன்றம் - ஓர் அலசல்
விரிகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய தமிழ் இசை விழா
'பாவாணர்' நூற்றாண்டு விழா & 15வது தேசிய தமிழ் மாநாடு
Share: 




© Copyright 2020 Tamilonline