Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி
ஓம் சரவண பவா
கொத்தவால் சாவடி பாட்டு
அமெரிக்க க(¡)ண்டம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
கீதாபென்னெட் பக்கம்
- |ஆகஸ்டு 2002|
Share:
இந்த வாரம் விமானத் தபால் மூலம் கைக்குக் கிடைத்த மிக சமீபத்திய தமிழ் பத்திரிகையில் விளம்பரம் ஒன்று என் கவனத்தைக் கவர்ந்தது.

ஒரு இளம்பெண் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறாள். ''என்னைப் பார்த்து அப்படியே அவன் அசந்து போக வேண்டும். பணக்காரனாக இருக்க வேண்டும்''. அதாவது அவள் அழகில் அவன் சொக்குவது மட்டுமல்ல... இளம் பெண்கள் பணக்காரர்களையே புருஷனாக தேர்ந்தெடுக்க ஆசைப்படுகிறார்கள் என்கிறது விளம்பரம்.

சென்ற வாரம் சனிக்கிழமை காலை பத்துமணிக்கு தொலைபெட்டியில் பனிரெண்டாம் சானலில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய நிகழ்ச்சி. அதில் தன் காதலிக்கு அவன் மிக அழகான பெரிய பூங்கொத்தை அளிக்கிறான். அதைப் பார்த்துவிட்டு அவள் கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொள்கிறாள். அவன் அதை கவனித்துவிட்டு ஆர்ட்டிசியாவில் இருக்கிற நகைக் கடையில் வாங்கி வந்திருக்கிற ஒரு நகைப்பெட்டியை அவளிடம் நீட்டுகிறான். அவள் அதை திறந்துப் பார்க்கிறாள். அதில் ஒரு அட்டிகை இருக்கிறது. அவள் திருப்தியுடன், ஆசையுடன், காதலுடன் அவன் முகத்தைப் பார்க்கிறாள். இந்த மாதிரி பெண்களுக்கு நம் சமூகத்தில் வேறு பெயர் உண்டு.

பிடித்த விளம்பரம் ஒன்று. சென்னை டிவியில் பார்த்தது. பல்போன இரண்டு வயதான கிழவிகள் பஸ் ஒன்றில் சேர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் புகைப்பிடித்துக் கொண்டு ஒருஇளைஞன் நின்றிருக்கிறான். பெண்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். எழுந்து நின்று இளைஞனை அவர்கள் இடத்தில் உட்கார சொல்லுகிறார்கள். அவன் அமர்கிறான். அப்போது ஒரு கிழவி இன்னொருத்தியிடம் சொல்கிறாள். வயதான நம்மைவிட அவன் தான் முதலில் சாகப் போகிறான். அவன் உட்கார்ந்துக் கொள்ளட்டுமே!'' மண்டையில் அடித்தாற்போல் ஒரு செய்தியை இதைவிட நன்றாக சொல்ல இயலுமா?

தமிழ்நாட்டு மெகா தொடர்களைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே. அதே போல் அமெரிக்க சோப் ஆப்பராக்களும் பெண்களுக்காக தான் எடுக்கப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த தொடர்களின் நடுவில் அவர்களைக் கவரும் வகையில் துணிக்குப் போடுகிற சோப், பாத்திரம் தேய்க்கிற சோப், கணவரைக் கவரப்போடும் சோப் என்று விளம்பரங்கள் வரும். அதனால்தான் அவை 'சோப் ஆப்பரா' என்று அழைக்கப்படுகின்றன.
இன்றைக்கும் நீங்கள் மதியம் பனிரெண்டு ஆனால் தொலைபெட்டியின் எதிரில் அமருவீர்கள் என்றால் மார்க்கெட்டுக்குப் புதிதாக வரும், பெண்களின் மனதைக் கவரும் அத்தனை பொருட்களின் பெயர்களும் உங்களுக்கு மனப்பாடமாக இருக்கும்.

அமெரிக்கா வந்த புதிதில் பென்னெட்டிடம் 'தாமஸ்ஸ் இங்கிலீஸ் ம·பின்ஸ் வாங்கலாம்'' என்றேன். ஒரு கணம் என்னைப் பார்த்துவிட்டு ரொம்பவே டிவி பார்க்கிறாய். இந்த மாதிரி மூளைச் சலவை செய்யதான் அமெரிக்க விளம்பரங்கள் தயாரிக்கப்படுகின்றன'' என்று சொன்னார். எனக்கு கொஞ்சம் வெட்கமாக போய்விட்டது.

நல்லவேளை! இப்போதெல்லாம் ரிமோட் என் கையில். எடுத்தவுடன் தேடுவது ம்யூட் பொத்தானை!!
More

மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி
ஓம் சரவண பவா
கொத்தவால் சாவடி பாட்டு
அமெரிக்க க(¡)ண்டம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline