Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
மஹாத்மா மஹாத்மா தான்
ஏண்டா வருது தீபாவளி
புகையும் ஆறாவது விரல்
கீதா பென்னட் பக்கம்
தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட!
இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா
மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன்
- |அக்டோபர் 2003|
Share:
அக்டோபர் 4, 2003ல் தொடங்கி நவம்பர் 23வரை அமெரிக்காவின் 20 நகரங்களில் தனது நாடகங்களை மேடையேற்ற வருகிறார் பிரபல திரைப்பட நடிகரான ஒய்.ஜி. மகேந்திரன். அவர் தன்னுடைய UAA (United Amateur Artistes) குழுவின் 12 உறுப்பினர்களோடு வந்து 'அந்த 7 ஆட்கள்' மற்றும் 'ஜட்ஜ்மெண்ட் டே' ஆகிய நாடகங்களை வழங்குகிறார்.

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னாலேயே 1989ல் அமெரிக்காவுக்கு வந்து முழுநீளத் தமிழ் நாடகங்களை முதன்முதலில் வழங்கியது தன் குழுதான் என்பதை மிகப் பெருமையாகக் குறிப்பிடுகிறார் மகேந்திரன். அதுமட்டுமல்ல, 1952லே ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டு பொன்விழாக் காணும் ஒரே தமிழ் அமெச்சூர் நாடகக் குழுவும் இதுதான்.

"இரண்டு மணி நேரம் சிரித்துவிட்டு மறந்துபோகிற மலிவான நகைச்சுவையை நான் வழங்குவதில்லை. என் நாடகங்களில் நகைச்சுவையோடு சமூகத்திற்குத் தேவையான செய்தியையும் நான் தருகிறேன்" என்று சொல்லும்போது நியாயமான பெருமிதம் அவர் குரலில். நவம்பர் 8ம் தேதி விரிகுடாப் பகுதியின் சான் ஹோசேயில் நடக்கவிருக்கும் அவரது நாடகங்களில் சேரும் நிதி சென்னை சங்கர நேத்ராலயாவின் கண் மருத்துவ விஸ்தரிப்பு நிதிக்குப் போகிறது என்பதிலிருந்து மகேந்திரனின் சமூக அக்கறை தெரிகிறது. சங்கர நேத்ராலயா ஏழைகளுக்கும் எட்டும் வகையில் உலகத் தரத்திலான கண் பராமரிப்பு மருத்துவ வசதியை வழங்குகிறது என்பது நீங்கள் அறிந்ததே.

"தென்னாப்பிரிக்கா, ரஷியா தவிர உலகில் தமிழர் இருக்கும் எல்லா நாடுகளிலும் எனது குழு மேடையேறியுள்ளது" என்கிறார் இவர். "ஆனாலும் இசை, நடனம், நாடகம் இவற்றிற்கு மிகத் தரமான ரசிகர்கள் இருப்பது அமெரிக்காவில் தான்" என நிச்சயமாகக் கூறுகிறார். மற்ற இடங்களில் ரசிகர்கள் சினிமாத்தனம் (திரை இசை, நடனம்) கலந்தால்தான் வரவேற்கிறார்கள் என்பது இவரது கணிப்பு.

அமெரிக்க அரங்குகளில் ஒலி, ஒளி தொழில்நுட்ப வசதிகள் மிக உயர்வாக இருக்கின்றனவே, நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறீர்களா என்று கேட்டோம். "அது சரிதான். ஆனால் நாங்க இப்படிப் புயல் மாதிரிப் போய் நாடகம் போட்டுட்டுத் திரும்பி வந்தா அதெல்லாம் முடியாது. யாராவது என்னை அங்கேயே 6 மாசம் இருந்து நாடகம் போடச் சொன்னால் மேடை, செட், ஒலி, ஒளி எல்லாம் அங்கிருக்கும் வசதிகளைப் பயன்படுத்தி அமைத்து ஒத்திகை பார்த்து பிரமாதமா செய்யலாம். பிராட்வே நாடகங்களுக்கு இணையா செய்யமுடியும். நான் செய்யவும் தயார் - யாராவது ஸ்பான்ஸர் செய்தால்."

"ஆனால் அத்தனை செலவு செய்து தயாரித்த நாடகத்தை ஒவ்வொரு ஊரிலும் ஒரு முந்நூறு நானூறு தமிழர்கள் வந்து ஒரே ஒரு முறை பார்த்தால் பொருளாதார ரீதியில் வெற்றி பெறமுடியாது." நல்ல தமிழ் கேட்க, நல்ல நடிப்பைப் பார்க்க, நல்ல பொழுதுபோக்குக்காக என்று இவைகளுக்காகத்தான் பிற நாடுகளில் தமிழர்கள் தன் நாடகங்களைப் பார்க்க வருகிறார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறார் மகேந்திரன்.

வலுவான கதைகள் இல்லாமல் வெறும் தொழில் நுட்பத்தின் மேன்மையால் இன்றைய தமிழ்த் திரையுலகம் ரசிகர்களை ஏமாற்ற நினைக்கிறது என்று வருந்துகிறார். இந்தப் படங்களில் 'ஆன்மா இல்லை' என்கிறார். "காதல்கோட்டை போன்ற வலுவான கதையம்சம் கொண்ட படம் வெற்றியடைந்தது. ஏன், இயக்குனர்கள் யோசிக்கவேண்டும். ரசிகர்கள் ஏமாளிகள் அல்ல". சிந்திக்க வைக்கிறார் மகேந்திரன்.

'அந்த 7 ஆட்கள்' நாடகத்தில் தானே ஏழு வேடங்கள் பூண்டு அசத்தியிருக்கிறார். நவராத்திரி சிவாஜி நினைவுக்கு வருகிறாரா? மகேந்திரனுக்கும் சிவாஜிதான் உந்துவிசை. "நடிகர் திலகத்தை மட்டும்தான் உண்மையான நடிகர்னு சொல்லுவேன். அவருடைய நடிப்பின் விரிவும் ஆழமும் வேறு யாருக்கு உண்டு?" மகேந்திரனின் அலுவலக வரவேற்பறையில் எங்கு பார்த்தாலும் காணப்படும் சிவாஜியின் படங்கள் இவரது மதிப்பீட்டுக்கு சாட்சியம். 'ஜட்ஜ்மெண்ட் டே'யும் நல்ல கதையம்சம் மற்றும் சிறந்த நடிப்பு இவற்றுக்காக வெகுவாகப் பாராட்டப்பட்டது.

உங்கள் ஊருக்கு வந்தால், தவறவிடாதீர்கள். மகேந்திரன் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார் "என்.எஸ். கிருஷ்ணனின் வழியில்".

மேலும் விவரம் அறிய: http://www.ygeem.com

******
எங்கு? என்றைக்கு?

ஒய்.ஜி. மகேந்திரனின் UAA குழுவினர் எங்கெங்கு நாடகம் போடுகிறார்கள் என்ற விவரம்:


நாள் ஊர் தொடர்புகொள்ள

அக்டோபர், 2003

04 மின்னியாபொலீஸ் 651 730 8313 - ரவிச்சந்திரன்
05 கான்ஸாஸ் 913 568 1776 - ராஜ்குமார்
11 அட்லாண்டா 770 594 1815 - ஆண்டாள் பாலு
12 மயாமி 954 384 2625 - அப்பு ரத்தினவேலு
17 ஜாக்ஸன்வில் 904 399 1736 - பாட்ரீசியா
18 இண்டியானாபொலீஸ் 317 849 0753 - சந்திரசேகர்
19 டெட்ராயிட் 248 563 6587 - சிவகாமி
24 ரிச்மண்ட் 804 346 8238 - வெங்கடேசச் செட்டியார்
25 வாஷிங்டன் டி.சி 703 725 9199 - விஜய் ஆனந்த்
26 க்ளிவ்லாண்ட் 440 572 0778 - மீரா
31 ஃபீனிக்ஸ் 623 572 5363 - ஸ்ரீனிவாசன்

நவம்பர், 2003

01 லாஸ் ஏஞ்ஜலஸ் 818 786 4801 - ராஜ் செல்வா
02 போர்ட்லாண்ட் 503 805 3315 - பாலாஜி
08 சான் ஹோசே 408 740 9807 - மணி
09 டாலஸ் 972 527 0819 - விஜி ராஜன்
14 ஆஸ்டின் 512 657 0190 - ராதா கிருஷ்ணன்
15 ஹுஸ்டன் 281 855 9696 - வேல் சுப்ரமணியம்
16 பாஸ்டன் 508 740 4127 - வெங்கட் பாலசுப்பிரமணியம்
22 நியூயார்க் 516 621 2167 - காஞ்சனா
23 நியூ ஜெர்ஸி 732 819 0773 - பார்கவி
More

மஹாத்மா மஹாத்மா தான்
ஏண்டா வருது தீபாவளி
புகையும் ஆறாவது விரல்
கீதா பென்னட் பக்கம்
தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட!
இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா
மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள்
Share: