Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அனுபவம் | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
காலம் என்பதொரு கணக்கு
- ஹரி கிருஷ்ணன்|ஆகஸ்டு 2022||(1 Comment)
Share:
துரியோதனன், தாங்கள் அக்ஞாதவாச காலத்துக்கான கெடு முடிவடைவதற்கு முன்னரே அர்ஜுனனை விராட மன்னரின் போர்க்களத்தில் கண்டுவிட்டதாக, கர்ணனுடன் சேர்ந்துகொண்டு சொல்லிக்கொண்டிருந்தான். இந்த இடத்தில் கும்பகோணம் பதிப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு, பின்வருமாறு சொல்கிறது;

"அப்பொழுது ராஜபுத்ரனான அந்தத் துரியோதனன், தூதனுடனும் சேர்ந்து, பீஷ்மரோடும் கர்ணனோடும் கிருபரோடும் த்ரோணரோடும் பூரிஸ்ரவஸோடும் ஆலோசனை செய்தான். மஹாத்மாவான பீஷ்மர், அநேக ஸுஹ்ருத்துக்களுடன் இரவில் நன்கு ஆலோசித்துத் துரியோதனனைப் பார்த்து, (துர்யோதன!) ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றின பிறகே தனஞ்சயனால் போரினிடையில் காண்டீவமானது நாணொலி செய்யப்பட்டது, பாண்டுவின் புத்திரர்கள், தேவேந்திரனுடைய உலகமாயிருந்தாலும், ப்ரம்மாவினுடைய உலகமாயிருந்தாலும் அஸத்யத்தால் அடைய விரும்பமாட்டார்கள். உனக்கு நான் உண்மையும். நல்வழியைவிட்டு விலகாததும் ஸ்வர்க்கத்தைக் கொடுக்கக்கூடியதும், கீர்த்தியைக் கொடுக்கக்கூடியதும் பரலோகத்துக்கு ஹிதமான வார்த்தையை உரைக்கிறேன். நீ குந்தீபுத்ரர்களோடு ஸந்தியைச் செய்துகொள். பாண்டவர்களோடு கூடி உன்னுடைய ராஜ்யத்தை அனுபவி. அப்படியல்லாமல், நீ ராஜ்யத்தை விரும்புவாயாகில் உறுதியுள்ள புத்தியுடன் போர்க்களத்தில் குந்தீபுத்ரர்களோடு போர்புரி. மஹிமை தங்கியவர்களும் பலசாலிகளுமான பகைவர்களுடைய ராஜ்யமானது, கபடத்தினால் கடைசிவரையில் அனுபவிப்பதற்கு ஸாத்தியப்படாதது. பகைவர்களை ஜயித்து, அகண்டமான ராஜ்யத்தை அனுபவி; (அல்லது) நீ அவர்களால் கொல்லப்பட்டு இந்த்ரலோகத்தை அனுபவி' என்று கூறினார்."

இந்த மொழிபெயர்ப்பு, 'நீ போர்புரிவதானால் போர்புரி. அல்லது அவர்களோடு போரிட்டு, வீரமரணம் அடை' என்று சொல்வதாகத் தெரிவிக்கிறதே ஒழிய, 'பாண்டவர்கள் அக்ஞாத வாச காலம் முடிந்து இவ்வளவு காலம் கழிந்தபிறகே அர்ஜுனன் போர்க்களத்தில் தென்பட்டான்' என்று அறுதியிட்டுச் சொல்லவில்லை. இப்போது, கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பையும், BORI பதிப்பின் மொழிபெயர்ப்பையும் தருகிறேன். காலச்செலவு 'இவ்வளவு' என்று குறிப்பிட்டிருப்தைப் பாருங்கள். அதுமட்டுமல்லாமல், ஒன்றுக்கு இரண்டு பதிப்புகளும் ஒரேபோன்று நடப்பதை கவனிக்கலாம். அதுவும் போரி பதிப்பு 1500க்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளை ஆய்ந்து பதிப்பிக்கப்பட்ட ஒன்று என்பதால், இதன் நம்பகத்தன்மை உறுதியாகிறது.

இப்போது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்பைத் தருகிறேன். இதன் பிறகு தரப்படும் போரி பதிப்பில், எவ்வளவு நாட்கள் கழிந்திருந்தன என்ற துல்லியமான விவரமும் தரப்படுகிறது. இரண்டையும் பார்ப்போம். முதலில் கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பு:

"Bhishma said, 'The wheel of time revolves with its divisions, viz., with Kalas and Kasthas and Muhurtas and days and fortnights and months and constellations and planets and seasons and years. In consequence of their fractional excesses and the deviations of also of the heavenly bodies, there is an increase of two months in every five years. It seems to me that calculating this wise, there would be an excess of five months and twelve nights in thirteen years. Everything, therefore, that the sons of Pandu had promised, hath been exactly fulfilled by them. Knowing this to be certain, Vibhatsu hath made his appearance. All of them are high-souled and fully conversant with the meanings of the scriptures. How would they deviate from virtue that have Yudhishthira for their guide? The sons of Kunti do not yield to temptation. They have achieved a difficult feat. If they had coveted the possession of their kingdom by unfair means, then those descendants of the Kuru race would have sought to display their prowess at the time of the match at dice. Bound in bonds of virtue, they did not deviate from the duties of the Kshatriya order. He that will regard them to have behaved falsely will surely meet with defeat. The sons of Pritha would prefer death to falsehood. When the time, however, comes, those bulls among men--the Pandava's--endued with energy like that of Sikra, would not give up what is theirs even if it is defended by the wielder himself of the thunderbolt. We shall have to oppose in battle the foremost of all wielders of weapons. Therefore, let such advantageous arrangements as have the sanction of the good and the honest be now made without loss of time so that our possessions may not be appropriated by the foe. O king of kings, O Kaurava, I have never seen a battle in which one of the parties could say--we are sure to win. When a battle occurs, there must be victory or defeat, prosperity or adversity. Without doubt, a party to a battle must have either of the two. Therefore, O king of kings, whether a battle be now proper or not consistent with virtue or not, make thy arrangements soon, for Dhananjaya is at hand.'

"Duryodhana said, 'I will not, O grandsire, give back the Pandavas their kingdom. Let every preparation, therefore, for battle be made without delay.'

"Bhishma said, 'Listen to what I regard as proper, if it pleases thee. I should always say what is for thy good, O Kaurava. Proceed thou towards the capital, without loss of time, taking with thee a fourth part of the army. And let another fourth march, escorting the kine. With half the troops we will fight the Pandava. Myself and Drona, and Karna and Aswatthaman and Kripa will resolutely withstand Vibhatsu, or the king of the Matsyas, or Indra himself, if he approaches. Indeed, we will withstand any of these like the bank withstanding the surging sea.'

இப்போது போரி பதிப்பின் மொழிபெயர்ப்பைப் பார்ப்போம். இது 1259 ஓலைச்சுவடிகளை, ஒரு அறிஞர் குழு, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஒப்பிட்டு ஆராய்ந்து பதிப்பித்தது.

'Bhishma said, "Parts of kalas, muhurtas,128 days, fortnights, months, nakshatras, planets, seasons and years are joined together and the wheel of time revolves in accordance with these measurements of time. Because of an excess of time and deviations in the paths of bodies in the sky, there is an addition of two months in every cycle of five years. I think that calculated in this way, during the passage of thirteen years, there are five additional months and twelve nights. They have done everything that they had promised to do. Knowing this for certain, Bibhatsu has arrived. All of them are great-souled and knowledgeable about dharma and artha. They have Yudhishthira as the king. Why should they act contrary to dharma? The Kounteyas are not avaricious and they have accomplished a difficult feat. They have Yudhishthira as their king. Why should they act contrary to dharma? They do not wish to acquire the kingdom by any means possible. Else, the descendants of the Kuru lineage would have displayed their valour at that time. They are bound by the nooses of dharma and they have not deviated from the vow of kshatriyas. If there is a choice between being called untruthful and confronting defeat, the Parthas would choose death over being untruthful. But the time has now arrived. Such is the valour of those bulls among men, the Pandavas, who are protected by the wielder of the vajra, that they will not give up what is their due. We must counter in battle the supreme among those who are skilled in weapons. Therefore, let everything be swiftly done, so that our objectives are not taken over by others, and so that the virtuous ones of the world do not think that we are against welfare. O Kourava! O Indra among kings! I have never witnessed a battle where success has been assured. Dhananjaya has arrived. When one engages in battle, there is prosperity and adversity, victory and defeat. One will confront one or the other. I have seen this without a doubt. Therefore, let us carry out the tasks that are needed for war, as long as those deeds are in conformity with dharma. Dhananjaya has arrived." 'Duryodhana replied, "O grandfather! I will not give the kingdom away to the Pandavas. Therefore, without any delay, let us make arrangements for the battle." 'Bhishma said, "If it pleases you to listen, hear what my advice is. Take one-fourth of the army and quickly leave for the city. Let another one-fourth gather the cattle and leave. We will counter Pandava with the remaining half of the army, or without a doubt. Therefore, let us carry out the tasks that are needed for war, as long as those deeds are in conformity with dharma. Dhananjaya has arrived." 'Duryodhana replied, "O grandfather! I will not give the kingdom away to the Pandavas. Therefore, without any delay’
Bibek Debroy. The Mahabharata (pp. 101-102). Penguin Books Ltd. Kindle Edition.

இந்தப் பகுதியின் கீழ் பிபேக் தேப்ராய் அவர்கள் 129, 130 என்று இரண்டு அடிக்குறிப்புகளைச் சேர்த்திருக்கிறார். அடிக்குறிப்பு எண் 129ல் அவர் பின்வருமாறு சொல்கிறார்:

There is a minor misstatement in the numbers. The twelve lunar months, with their respective days, add up to 354 days and eight hours. But the solar year has 365 days and six hours. Hence, there is an excess of eleven days in every year and fifty-five days in every five years, just short of two months.
Bibek Debroy. The Mahabharata (p. 583). Penguin Books Ltd. Kindle Edition.

இந்த விவரங்கள் புரியவேண்டுமானால், நாம் மேலும் சிறிது பாடுபடவேண்டியிருக்கும். சந்திரமான மாசம், சௌரமான மாசம் என்றால் என்ன, அதிக மாசம் என்றால் என்ன என்றெல்லாம் விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கும். நாம் தமிழ்நாட்டில் பின்பற்றுவது Solar Calendar எனப்படும் சௌரமான கணக்கு. அஸ்தினாபுரம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா ஆகியனவற்றிலும் பின்பற்றப்படும் சந்திரமான மாசம் எனப்படும் Lunar Cander-ஐ விளங்கிக்கொள்ள வேண்டிவரும். இவற்றைக் கூடுமானவரையில் சுருக்கமாக அடுத்த தவணையில் பார்ப்போம். அதுமட்டும் போதாது. சந்திரமான மாசத்துக்கும் சௌரமான மாசத்துக்கும் உள்ள வேறுபாடு, இந்த நாள் கணக்கை எப்படி பாதிக்கிறது என்றும் புரிந்துகொள்ளவேண்டும்.

(தொடரும்)
ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline