Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
May 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
பொது
காதில் விழுந்தது.....
ஃபோல்ஸம் விளையாட்டுக் குழு
- மாலதி சுந்தரம்|மே 2005|
Share: 
Click Here Enlargeநாங்கள் கலிபோர்னியாவில் சாக்ரமண்டோவிலுள்ள ·போல்ஸம் பகுதியில் வாழ்கிறோம். என் மகனும் இன்னும் பத்துப் பதினைந்து இந்திய மாணவர்களும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக முதுகலை மாணவர்களாக அமெரிக்காவில் வாழ்க்கையைத் துவங்கினர். தற்சமயம் அவர்கள் மனைவி, குழந்தைகளுடன் வாழ்கிறார்கள். இவர்களுக்கு 6 மாதம் முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் ஒரு நண்பர் வீட்டிற்குப் பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். இங்கே குழந்தைகள் பல விளையாட்டுப் பொருட்களைப் பகிர்ந்து விளையாடி மகிழ்கிறார்கள். தங்கள் வீடுகளில் பெரும்பாலும் பெற்றோர்களுடன் மட்டுமே தனியாக இருக்கும் இந்தக் குழந்தைகள் பல புதியவர்களை இங்கே சந்தித்துப் பழகுகிறார்கள். மேலும் அவர்கள் புரிந்துக் கொள்ளும் அளவில் கை தட்டுதல், தலை அசைத்தல், நர்சரி ரைம்ஸ் பாடல்களைக் கேட்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். இந்தியப் பழக்கங்களான வணக்கம் சொல்லுதல், நமஸ்கரித்தல் போன்ற செயல்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

இதற்கு Folsom Play Group என்று பெயரிட்டு அழைக்கிறோம். உங்கள் பகுதியிலும் செய்து பார்க்கலாமே!
மாலதி சுந்தரம்
More

காதில் விழுந்தது.....
Share: