Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
சங்கர நேத்ராலயா: "பார்க்கும் விழி நான் உனக்கு!"
- இருங்கோவேள்|பிப்ரவரி 2020||(2 Comments)
Share:
இந்தியாவில் வாழும் பிரபலங்கள் பலர் சிகிச்சைக்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காகச் செல்லும் நாளில், அமெரிக்காவில் வாழும் இந்தியர் ஒருவர் தன் தந்தையின் கண் சிகிச்சைக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை சங்கர நேத்ராலயாவிற்குச் செல்கிறார். எவரானாலும் ஒரே கட்டணத்தில், ஒரே உலகத் தரத்தில் சிகிச்சை வழங்கப்படுவதைப் பார்க்கிறார். அதிலும் ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாகச் சேவை என்பதைப் பார்த்த அவர் நெகிழ்ந்து போனார். சங்கர நேத்ராலயாவில் சிகிச்சை பெறுவோரில் சுமார் 50% பேர் முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் என்பதை அவர் தெரிந்து கொள்கிறார். அமெரிக்காவில் ஒரு நிதித்துறை ஆலோசகராகச் செயல்படும் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய உறுதி பூணுகிறார்.

அவர்தான் திரு S.V. ஆச்சார்யா. அவர் சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் S.S. பத்ரிநாத் அவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். ஒரு தீர்மானத்தோடு அமெரிக்கா திரும்புகிறார். அங்கே சட்ட நிபுணர்களோடும் நிதி வல்லுநர்களோடும் ஆலோசிக்கிறார்.

அமெரிக்காவில் நிதி திரட்டி, இந்தியாவிலுள்ள பார்வை பாதிக்கப்பட்ட ஏழைகள் சிகிச்சைக்கு அந்த நிதியைச் சென்னை, சங்கர நேத்ராலயாவிற்கு அனுப்பி வைப்பது என்ற குறிக்கோளுடன், Sankara Nethralaya Ophthalmic Mission Trust Inc, USA என்ற பெயரில் (501)(c)(3) charity, வரிவிலக்குப் பெற்ற அமைப்பை 1988ம் ஆண்டு மேரிலாண்டில் தொடங்குகிறார். நல்லோர் பலரும் அறங்காவலர்களாக இணைய, வாஷிங்டன், அட்லாண்டா, ஹூஸ்டன், டாலஸ், சிகாகோ, நியூ யார்க், லாஸ் ஏஞ்சலஸ், சான் ஃபிரான்சிஸ்கோ என அது கிளைத்துத் தழைக்கிறது.

30 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் இன்று இந்த அறக்கட்டளையும் சென்னை, சங்கர நேத்ராலயாவும் பயனாளிகளின் சார்பாகத் தனது நன்றியையும், கடந்து வந்த பயணத்தையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறது.

கிராம மக்களுக்குக் கண்ணொளி
ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாகக் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்சுடன் கண் ஆபரேஷன் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது சங்கர நேத்ராலயா. அவர்களது இருப்பிடத்திலிருந்து சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்று, தங்குமிடம், உணவு அனைத்தையும் வழங்கி ஆபரேஷனும் இலவசமாகச் செய்கிறது.

வளர்ச்சியடையாத கிராமப்புற மக்களுக்கு, IIT மெட்ராஸ் மற்றும் சங்கர நேத்ராலயா இணைந்து உருவாக்கிய திட்டம் Mobile Eye Surgical Unit (MESU) எனப்படும் மொபைல் கண் மருத்துவ அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகும். இதன்கீழ் ஒரு பேருந்து எல்லாத் தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட ஆபரேஷன் தியேட்டராக உள்ளது; மற்றொன்று நோயாளியை ஆபரேஷனுக்குத் தயார்படுத்தும் வசதிகள், டாகடர், தியேட்டர் உதவியாளர்கள் அறை கொண்ட பகுதி. இரண்டு பேருந்துகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தடையற்ற மின்சாரம் வழங்கும் ஜெனரேட்டர், தரமான தண்ணீர், காற்று, நுண்கிருமிகள் புகாச் சூழல் யாவும் உள்ளன.

மலைப்பகுதிகள், பழங்குடியினர் வசிப்பிடங்கள் என எளிதில் மருத்துவம் எட்டாத இடங்களுக்கும் இவற்றின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கண் அறுவை சிகிச்சையைக் கொண்டுசெல்ல முடிகின்றது.

இந்தத் திட்டத்தின் பயனாளி, ஆபரேஷன் முடிந்த சில மணி நேரத்திலேயே வீடு திரும்பலாம். ஆபரேஷன் முடிந்து ஒரு வாரம் கழித்துச் செய்யவேண்டிய பரிசோதனை அவரது ஊரிலேயே செய்யப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற்ற ஒரு நோயாளிக்குக்கூட ஆபரேஷனுக்குப் பின்னர் வர வாய்ப்புள்ள எந்தப் பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இதன் மூலம் தமிழகம் மற்றும் தமிழக ஆந்திர எல்லைப்பகுதிக் கிராமங்களில் இன்றுவரை 29 முகாம்கள் நடத்தி 3326 ஆபரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன.2015 ஆண்டில் இந்த நடமாடும் கண் அறுவை சிகிச்சைப் பிரிவின் சேவையை தேசிய அளவில் விரிவுபடுத்த மத்திய அரசு அனுமதித்தது. தென்னகத்திற்கு வெளியே முதன் முறையாக ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஜூலை 31, 2016 அன்று அந்த மாநில முதலமைச்சர் ஸ்ரீரகுபர்தாஸ் அவர்கள் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்துக்கு நவாஜ்பாய் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் எச்.டி. பாரிக் ஃபவுண்டேஷன் அமைப்புகள் இணைந்து உபகரணங்கள் தருவிக்கவும் முகாம்கள் நடத்தவும் ஆதரவு அளிக்கின்றன.
பள்ளிக்குழந்தைகளுக்கு...
பள்ளிக்கூடங்களில் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்துவதோடு கண்ணாடிகளும் வழங்கப்படுகின்றன. வேறுவகை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு சங்கர நேத்ராலயாவின் சென்னை தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு பெரிய குழுவினர் ஒரே நாளில் சென்னையிலுள்ள 38 மாநகராட்சிப் பள்ளிகளின் 8469 குழந்தைகளுக்கு கண் பரிசோதனை செய்து, தேவைப்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கண்ணாடிகளையும் வழங்கிய பெரும் சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில்
இத்தகைய சேவை திருவண்ணாமலைக்கு அருகே உள்ள சேத்துப்பட்டு கிராமத்திலும் செப்டம்பர் 2018 முதல் சூரஜ் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை வழங்கி வருகிறது. மகாத்மாவின் 150வது பிறந்த நாளையொட்டித் திருவண்ணாமலை மாவட்டத்தில் 150 கிராமங்களில் அங்குள்ள மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவியருக்கும் இலவசமாக கண் சிகிச்சை வழங்கும் SNEHAM 2020 (Sankara Nethralaya Eye Hospital Anjali to Mahathmaa 2020) திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

இவையனைத்தும் சேவை மனப்பான்மை மிக்க அமெரிக்க-இந்தியர்கள் மற்றும் பிற நன்கொடையாளர்கள் வழங்கும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமாகிறது. சங்கர நேத்ராலயா ஆப்தால்மிக் மிஷன் டிரஸ்ட் USA அமைப்பிற்கு மிகச்சிறந்த லாபநோக்கின்றி செயல்படும் தொண்டு நிறுவனம் என்ற சான்றிதழை, 'Charity Navigator' வழங்கியுள்ளது.

நீங்கள் ஓம் டிரஸ்ட்டில் ஒரு உறுப்பினராக இணையலாம்; அல்லது நீங்கள் வாழும் நகரத்தில் ஓம் டிரஸ்ட்டின் ஒரு கிளையை ஆரம்பித்து உதவிக்கரம் நீட்டலாம். உங்கள் தொடர்ந்த ஆதரவினை வழங்குங்கள். கீழ்க்கண்டோர் உங்களுக்கு அதற்கு உதவுவார்கள்:

Cheques/drafts favoring Sankara Nethralaya Om Trust can be sent to the above address.
Donate online: www.sankaranethralayausa.org

மேலும் விவரங்களுக்கு:
Mr S V Acharya, President Emeritus, Sankara Nethralaya OM Trust Inc, 9710, Traville Gateway Drive, No. 392, Rockville, MD 20850, U.S.A.
Tel No: (855) 4NETHRA - Toll Free
Email: acharya@snomtrust.org
Smt. Leela Krishnamurthy - 832-654-9444 - leelakm@icloud.com

Dr. A.P. இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை
Share: 
© Copyright 2020 Tamilonline