| சேமியா இனிப்புப் பொங்கல் பால்பழப் பொங்கல்
 அவல் சர்க்கரைப் பொங்கல்
 முப்பால் பொங்கல்
 சேமியா பொங்கல்
 அவல் பொங்கல்
 ரவா புளிப்பொங்கல்
 சுக்கினி பொங்கல்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  புத்தாண்டுக்காக நுண்ணலை அடுப்பில் எளிதாகச் செய்யக்கூடிய கேக் செய்முறை ஒன்றோடு தொடங்குவோமா? 
 அடுத்து பொங்கல் என்றதும் நம் நினவுக்கு வருவது சர்க்கரைப் பொங்கல்தான். இந்த மலரில் அனேகமாக அனைவருக்கும் தெரிந்த பொங்கல் வகைகளை அடிப்படையாகக் கொண்டு சில புதுமையான பொங்கல்களின் செய்முறைகளைத் தருகிறேன்.
 
 பாதாம்பழ கேக்
 
 தேவையான பொருட்கள்
 
 பேரீச்சம் பழம் (கொட்டை நீக்கி நறுக்கியது) - 1/8 கிண்ணம்
 செர்ரி (நறுக்கியது)	- 1/8 கிண்ணம்
 உலர்திராட்சை	- 1/8 கிண்ணம்
 ஏப்ரிகாட் (apricot)	- 1/8 கிண்ணம்
 அத்திப்பழம் (Fig)	- 1/8 கிண்ணம்
 பால்	-	1கிண்ணம்
 வெண்ணெய் -	1/2 கிண்ணம்
 பழுப்புச் சர்க்கரை (brown sugar) - 1/3 கிண்ணம்
 பாதாம் பொடி - 1 கிண்ணம்
 முட்டை	- 2
 வால்நட், பாதாம், பிஸ்தா, முந்திரி (உடைத்தது) -	1/2 கிண்ணம்
 ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசிச் சாறு கலவை -	1 மேசைக்கரண்டி
 லவங்கப் பட்டைத் தூள் - 1/4 தேக்கரண்டி
 ஜாதிக்காய்த் தூள்	- 1/4 தேக்கரண்டி
 சமையல் சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
 பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி
 உப்பு - 1 சிட்டிகை
 வனில்லா எஸன்ஸ்	- 1/4 தேக்கரண்டி
 ஆரஞ்சு எஸன்ஸ்	- 1/4 தேக்கரண்டி
 எலுமிச்சை எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை: 
 பாதாம் பொடியை சமையல் சோடா உப்பு, பேகிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும். சலித்த பின் சல்லடையில் உள்ள பாதாம் தோலையும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையையும் உடைத்து அடித்த முட்டையையும் போட்டு நன்கு குழைக்கவும். பின்னர் இதில் சலித்த பாதாம் மாவைப் போட்டு மென்மையாகக் கிளறவும். இத்துடன் முட்டை மற்றும் எல்லாப் பொருட்களையும் சேர்த்து மென்மையாகக் கிளறி மிகவும் கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து மறுபடியும் மென்மையாகக் கிளறி நுண்ணலை அடுப்பில் வைக்கும் கண்ணாடிப் பாத்திரத்தில் விடவும். மாவு இட்லி மாவுப் பதத்தில் இருக்க வேண்டும்.
 
 நுண்ணலை அடுப்பில் வைக்கும் ஒரு China bowl-ஐக் கவிழ்த்துப் போடவும். இதன்மீது இந்த கேக் மாவுக் கலவை உள்ள கண்ணாடிப் பாத்திரத்தை வைத்துப் பின்னர் உயர்திறனில் (high power) 10-15 நிமிடங்கள் வேகவைக்கவும். கேக்கின் நடுவில் ஒரு மரக்குச்சியை விட்டுப் பார்த்தால் ஒட்டாமல் வந்ததும் எடுத்து விடவும். பத்து நிமிடங்கள் ஆறிய பின்னர் வெட்டலாம்.
 
 நுண்ணலை அடுப்பில் கேக் செய்யும்போது அது எடுத்துக்கொள்ளும் நேரம் அவரவர் அடுப்பின் திறனைப் பொறுத்தது.
 
 கேக் மிருதுவாக வர வேண்டுமென்றால் அதைத் தயாரிக்க உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் சாதாரண சீதோஷ்ண நிலையில் (normal room temperature) இருக்கவேண்டும்.
 
 சரஸ்வதி தியாகராஜன், டேடன், ஒஹையோ
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சேமியா இனிப்புப் பொங்கல்
 பால்பழப் பொங்கல்
 அவல் சர்க்கரைப் பொங்கல்
 முப்பால் பொங்கல்
 சேமியா பொங்கல்
 அவல் பொங்கல்
 ரவா புளிப்பொங்கல்
 சுக்கினி பொங்கல்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |