| பாதாம் அல்வா அசோகா அல்வா
 காரட் அல்வா
 பீட்ரூட் அல்வா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  அல்வா பிடிக்காதவர் யார் இருக்கிறார்? சிலருக்கு அல்வா கொடுக்கப் பிடிக்கும். இதோ சில அல்வா வகைகள். 
 கோதுமை அல்வா
 
 தேவையான பொருட்கள்
 
 சம்பா கோதுமை	-	2 கிண்ணம்
 சர்க்கரை	-	4 கிண்ணம்
 நெய்	-	2 கிண்ணம்
 முந்திரிப் பருப்பு	-	8
 ஏலக்காய்	-	6
 பச்சை கற்பூரம்	-	சிறிதளவு
 கேசரித் தூள்	-	சிறிதளவு
 
 செய்முறை
 
 வெந்நீரைக் கொதிக்க விட்டு அதில் கோதுமையை ஊறப் போடவும். 5-6 மணிநேரம் ஊறலாம். பிறகு எடுத்து அரைத்துப் பால் பிழியவும். 2 அல்லது மூன்று பால் எடுத்துச் சல்லடையில் வடிகட்டி வைக்கவும். சர்க்கரை சேர்த்து, 2 கிண்ணம் தண்ணீர் விட்டுப் பாகு வைக்கவும். பாகு நன்கு முற்றி வரவேண்டும். கோதுமைப் பாலில் மேலாக உள்ள நீரை வடித்துவிட்டு அதைப் பாகில் போட்டுக் கிளற வேண்டும். இடையில் நெய் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்கவும். கேசரித் தூள், முந்திரி ஆகியவற்றை வறுத்துப் போட்டு, பச்சைக் கற்பூரம் போடவும். சுருண்டு வரும்போது இறக்கிவிடவும். பாதாம் பருப்பை ஊறவிட்டு அரைத்துச் சேர்த்தும் செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
 
 பஞ்சாப் கோதுமை மாவைக் கரைத்து சல்லடையில் வடிகட்டிச் சக்கையை எடுத்து விட்டும் செய்யலாம்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாம | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பாதாம் அல்வா
 அசோகா அல்வா
 காரட் அல்வா
 பீட்ரூட் அல்வா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |