| அரைப்புளிக் குழம்பு நாரத்தங்காய் குழம்பு
 கடுகு குழம்பு
 மசாலா குழம்பு
 பருப்பு உருண்டை குழம்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  வற்றல் குழம்பு 
 தேவையான பொருட்கள்
 
 புளி		-	ஒரு எலுமிச்சை அளவு
 சாம்பார் பொடி	-	2 1/2 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிது
 உப்பு		-	தேவைக்கேற்ப
 கறிவேப்பிலை	-	சிறிதளவு
 எண்ணெய்		-	5 தேக்கரண்டி
 
 வற்றல்கள்:
 மணத்தக்காளி, சுண்டைக்காய், அப்பளம்
 பப்படம், குழம்பு வடகம்
 காய்கறிகளும் வெண்டை, கத்திரி, முருங்கைக்காய் போடலாம்.
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 புளியை நன்றாகக் கரைத்து 2 கப் எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் நன்கு காய விடவும்.
 
 எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், மிளகாய் வற்றல், துவரம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டுத் தாளிக்கவும்.
 
 பிறகு அதில் சாம்பார் பொடியை போட்டு ஒரு பெரட்டு பெரட்டி புளித் தண்ணீரை விட்டு, அதில் தேவையான உப்பும் போட்டுக் கொதிக்கவிடவும்.
 
 நன்றாக கொதித்து வரும் போது வைத்திருக்கும் வற்றலை எண்ணெய்யில் போட்டு வறுத்து போடவும். இதனைத் தாளிக்கும் எண்ணெய்யிலும் பொரித்து விடலாம்.
 
 அப்பளம், பப்படம், வடகம் ஆகியவற்றை பொரித்து எடுத்து குழும்பை அடுப்பில் இருந்து இறக்கும் போதுகூட போடலாம்.
 
 சாம்பார் பொடி வாசனை போகும் அளவிற்கு கொதித்தப் பிறகு இறக்கி வைக்கவும்.
 
 காய்கறியானால் கொதிக்கும் போது போடவும்.
 
 நல்லெண்ணெய்யில் குழம்பு செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
 
 வெந்தயக்குழம்பு
 
 மேற்கூறியபடி செய்து இறக்கும் போது கொஞ்சம் கடலைமாவு அல்லது அரிசிமாவு கரைத்துவிடலாம். தேங்காய் துருவல், வேர்க்கடலை, கொத்துக்கடலை, இவற்றை வறுத்து வேகவிட்டும் போட்டால் சுவையாக இருக்கும். இதை கொட்டுக்குழம்பு என்றும் சொல்வர்.
 
 தங்கம் ராமசாமி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அரைப்புளிக் குழம்பு
 நாரத்தங்காய் குழம்பு
 கடுகு குழம்பு
 மசாலா குழம்பு
 பருப்பு உருண்டை குழம்பு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |