| தேங்காய் அவல் மிளகு அவல்
 வெஜிடபள் அவல்
 பருப்பு உசிலி அவல்
 அவல் பொங்கல்
 வெல்ல அவல்
 அவல் கேசரி
 அவல் தோசை
 அவல் பக்கோடா
 அவல் கட்லெட்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  கிருஷ்ணன் தன் பால்ய நண்பன் குசேலனிடம் கேட்காமலே எடுத்து ருசித்த அவல் பற்றிய கதையை அனைவரும் அறிவர். சிறுவர் முதல் அனைவருக்கும் விருப்பமான அவலில் இருந்து சில சமையல் குறிப்புகள்... 
 புளி அவல்
 
 தேவையான பொருட்கள்:
 அவல்	-	1 கிண்ணம்
 புளி	-	1/2 எலுமிச்சம் அளவு
 வெங்காயம்	-	1
 கடுகு	-	1 தேக்கரண்டி
 உளுத்தம்பருப்பு	-	1 தேக்கரண்டி
 கடலைப் பருப்பு	-	1 தேக்கரண்டி
 பெருங்காயம்	-	சிறிதளவு
 மஞ்சள் பொடி	-	சிறிதளவு
 பச்சை மிளகாய்	-	3 அல்லது 4
 உப்பு	-	தேவைக்கேற்ப
 கருவேப்பிலை,
 கொத்துமல்லி	-	சிறிதளவு
 எண்ணெய்(தாளிக்க) 	-	சிறிதளவு
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை: அவலை புளி தண்ணீரில் விட்டு உப்பும் போட்டு ஊற வைக்கவும்.
 வாணலியில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் போட்டு வெடிக்கவிடவும். கடுகு வெடித்து, பருப்புகள் சிவந்து வரும் நேரத்தில் வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்கவும்.
 நன்கு வெந்ததும் மஞ்சள் பொடி போட்டு, புளியில் ஊற வைத்த அவலையும் சேர்த்து நன்றாக வதக்கவும். புளி வாசனை போகட்டும். பிறகு கொத்துமல்லி, கருவேப்பிலையை பொடி பொடியாக நறுக்கி அதில் போடவும்.
 
 புளி அவல் இப்போது ரெடி. சில நேரங்களில் புளிக்கு பதிலாக எலுமிச்சம்பழம் சாறுகூட விட்டுச் செய்யலாம்.
 
 தங்கம் ராமசாமி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தேங்காய் அவல்
 மிளகு அவல்
 வெஜிடபள் அவல்
 பருப்பு உசிலி அவல்
 அவல் பொங்கல்
 வெல்ல அவல்
 அவல் கேசரி
 அவல் தோசை
 அவல் பக்கோடா
 அவல் கட்லெட்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |