| தேங்காய் பால் சாதம் வெஜிடபுள் கட்லெட்
 ஆலு மட்டர்
 தக்காளி பிரைட் ரைஸ்
 வெண்டைக்காய் மசாலா
 மலபார் முட்டை குருமா
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | வெஜிடபிள் பிரியாணி |    |  
	                                                        | - ![]() | ![]() மே 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  தேவையான பொருட்கள் 
 பாஸ்மதி அரிசி  	400 கிராம்
 வெங்காயம்  	2 பெரியது
 தக்காளி   		2
 பச்சைப் பட்டாணி 	1 பாக்கெட்
 பீன்ஸ், கேரட், 	1/4 கிலோ
 உருளைக் கிழங்கு  	1/4 கிலோ
 கெட்டித் தயிர்  	அரை கப்
 புதினா, கொத்துமல்லி  	சிறிதளவு
 உப்பு  		தேவைக்கேற்ப
 டால்டா  		100 கிராம்
 பட்டை, லவங்கம், சோம்பு  சிறிதளவு 	(தாளிக்க)
 ஏலக்காய்  		1
 முந்திரி 		8
 இஞ்சி 		சிறு துண்டு
 பூண்டு 		5 பல்
 பச்சை மிளகாய் 	2
 மிளகாய்த் தூள் 	2 ஸ்பூன்
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் பச்சைமிளகாயையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பீன்ஸ், கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் டால்டாவை ஊற்றி நன்கு காய்ந்தவுடன் பட்டை, லவங்கம், சோம்பு, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றைப் போடவும். பிறகு வெங்காயத்தையும், பச்சைமிளகாயையும் போட்டு, பொன்னிறமானவுடன் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுதையும், புதினா தழைகளையும் சேர்க்கவும். பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களைக் கெட்டித் தயிரை விட்டுக் கிளறவும்.
 
 இதனுடன் சுத்தம் செய்த பாஸ்மதி அரிசியையும் நான்கு டம்ளர் தண்ணீரையும் சேர்க்கவும். பிறகு மிளகாய்த் தூளையும் தேவைக்கேற்ப உப்பையும் போட்டு நன்கு கிளற வேண்டும். பின் இக்கலவையை குக்கரில் வைத்து மூன்று விசில் வந்தவுடன் இறக்கி விடவும்.
 
 இப்போது ருசியான வெஜிடபிள் பிரியாணி தயார். நீங்களும் சமைத்துப் பாருங்களேன்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தேங்காய் பால் சாதம்
 வெஜிடபுள் கட்லெட்
 ஆலு மட்டர்
 தக்காளி பிரைட் ரைஸ்
 வெண்டைக்காய் மசாலா
 மலபார் முட்டை குருமா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |