| ரிகோட்டா அல்வா ரிகோட்டா சீஸ் பர்·பி
 ரிகோட்டா காரட் அல்வா
 பாஸந்தி
 ரிகோட்டா சாக்கலேட் சீஸ்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  ரிகோட்டா சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியைப் பயன்படுத்திச் செய்யக்கூடிய சில இனிப்பு வகைகளைப் பார்க்கலாம். 
 ரிகோட்டா சீஸ் என்பது மொஸரல்லா போன்ற மற்றவகைச் சீஸ்கள் செய்யும்போது வரும் வே(whey)யுடன், பாலை கலந்து மறுபடியும் தயாரிக்கும் ஒரு சீஸ் ஆகும். இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும் சுண்ணாம்புச் சத்து மிகுந்தும் உள்ளது.
 
 ரிகோட்டா திரட்டுப்பால்
 
 தேவையான பொருட்கள்
 
 ரிகோட்டா சீஸ் - 1 கிண்ணம்
 இனிப்புள்ள குறுக்கிய பால் (sweet condensed milk)	- 1 டப்பா
 வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 வறுத்த முந்திரிப் பருப்பு - 8
 ஏலப்பொடி - சிறிதளவு
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 சீஸ், குறுக்கிய பால், வெண்ணெய் ஆகியவற்றை அடி கனமான வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டு இருக்கவும். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து இது திரட்டுப்பால் பதத்திற்குக் கெட்டியாக வந்த பின்னர் இறக்கி வறுத்த முந்திரியுடன் ஏலப்பொடி கலந்து கிளறி பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
 
 இந்த ரிகோட்டா சீஸ் கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து விட்டுச் செய்தால் திரட்டுப்பால் மென்மையாக (smooth) வரும். இல்லையேல் திரிதிரியாக இருக்கும். தேவைக்கேற்பச் செய்து கொள்ளவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ரிகோட்டா அல்வா
 ரிகோட்டா சீஸ் பர்·பி
 ரிகோட்டா காரட் அல்வா
 பாஸந்தி
 ரிகோட்டா சாக்கலேட் சீஸ்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |