| வெல்ல அவல் வெல்லத் தோசை
 வெல்லக்கூட்டு
 தயிர் சாதம்
 சொஜ்ஜி ரொட்டி
 பருப்புத் தீர்த்தம்
 வாசகர் கைவண்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  இப்போதெல்லாம் மருத்துவர் உப்பைக் குறைக்கச் சொல்கிறார். 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று சிறு வயதிலிருந்தே கேட்டு வளர்ந்துவிட்ட நமக்கு உப்பில்லாமல் சாப்பிடுவது மிகக் கடினமாக இருக்கிறது. அஞ்சவேண்டாம். இதோ சில உப்பில்லாத உணவு வகைகளே. 
 தேங்காய்ப் பால்
 
 தேவையான பொருட்கள்
 
 முற்றிய தேங்காய் - 1
 வெல்லத்தூள் - 1 கிண்ணம்
 ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
 தண்ணீர் - 2 கிண்ணம்
 
 செய்முறை
 
 தேங்காயைத் துருவி முக்கால் கிண்ணம் தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதைப் பிழிந்து வடிகட்டவும். கெட்டியான இந்த முதல் பாலைத் தனியாக வைக்கவும்.
 
 பிழிந்த சக்கையில் மீண்டும் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டவும். சுமாரான கெட்டியாக உள்ள இந்த இரண்டாவது பாலை தனியாக வைக்கவும்.
 
 மூன்றாம் முறையாக மீதி உள்ள தண்ணீரை தேங்காய் சக்கையில் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டிய நீர்த்த பாலில் வெல்லப் பொடியை போட்டு அடுப்பில் வைத்துக் கரைய விடவும்.
 
 வெல்லம் கரைந்து சிறிது கொதித்ததும் இரண்டாம் முறை பிழிந்த பாலை விட்டு மீண்டும் சிறிது கொதிக்க விடவும்.
 
 பிறகு முதல் முறை பிழிந்த கெட்டியான பாலை விட்டு, கீழே இறக்கி ஏலப்பொடி போடவும்.
 
 தேங்காயின் அளவைப் பொறுத்து வெல்லம் சற்று அதிகமாகவோ குறைவாகவோ தேவைப்படலாம்.
 | 
											
												|  | 
											
											
												| இந்திரா காசிநாதன் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 வெல்ல அவல்
 வெல்லத் தோசை
 வெல்லக்கூட்டு
 தயிர் சாதம்
 சொஜ்ஜி ரொட்டி
 பருப்புத் தீர்த்தம்
 வாசகர் கைவண்ணம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |