| காளான் சலாட் காளான், பட்டாணி பிரியாணி
 காளான் பக்கோடா
 காளான் கறி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  காளான் மிகச் சுவையான, சத்துள்ள தாவர உணவாகும். இதற்குப் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இதில் கொழுப்புச் சத்து குறைவாகவும், புரதம், மாவுச்சத்து, நார்ப்பொருள், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் B1 மற்றும் B2 ஆகியவை மிக அதிகமாவும் இருக்கின்றன. கீழ்க்கண்ட தயாரிப்புகளுக்கு பட்டன் காளான் வகையே பொருத்தமானதாக இருக்கும். 
 காளான்-புதினா சூப்
 
 தேவையான பொருட்கள்
 
 காளான் (fresh or tinned) - 3/4 கிண்ணம்
 வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
 வெங்காயம் (நறுக்கியது) - 1
 மைதா மாவு - 1/2 கிண்ணம்
 வெஜிடபிள் ஸ்டாக் - 3 கிண்ணம்
 பால் - 3 கிண்ணம்
 புதினா இலை - 6
 fresh cream - 6 தேக்கரண்டி
 உப்பு, மிளகுத் தூள் - தேவையான அளவு
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 ஒரு வாணலியில் வெண்ணெயைப் போட்டு, அதில் வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கவும். பின் காளானைப் போட்டு 3 அல்லது 4 நிமிடங்கள் வதக்கவும். மைதாவைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
 
 இதில் வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அடிக்வும். பால், உப்பு. மிளகு தூள் சேர்க்கவும். அடுப்பில் ஏற்றி சரியான பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.
 
 புதினா இலை சேர்க்கவும். பரிமாறும்போது ஒவ்வொரு கிண்ணத்திலும் ஒரு தேக்கரண்டி க்ரீம் போட்டு அலங்கரிக்கவும்.
 
 மீனாக்ஷி கணபதி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 காளான் சலாட்
 காளான், பட்டாணி பிரியாணி
 காளான் பக்கோடா
 காளான் கறி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |