| கத்தரிக்காய் தேங்காய் பால் கிரேவி கத்தரிக்காய் சாலட்
 கத்தரிக்காய் துவையல்
 கத்தரிக்காய் எண்ணைய் கறி
 கத்தரிக்காய் பருப்பு அடைத்த கறி
 கத்தரிக்காய் ரசவாங்கி
 கத்தரிக்காய் பஜ்ஜி
 கத்தரிக்காய் ·ப்ரிட்டர்ஸ் (Fritters)
 கத்தரிக்காய் கறி (ஒவனில்)
 கத்தரிக்காய் காஸரோல் (Casserole)
 கத்தரிக்காய் பாஸ்தா
 கத்தரிக்காய் மசாலா கிரேவி
 மாதுளம்பழம்
 மாதுளம் பழம் ஐஸ் க்ரீம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  கத்திரிக்காய் மசாலா 
 தேவையான பொருட்கள்
 
 கத்திரிக்காய் 			- 10
 வெங்காயம் 			- 1 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
 தக்காளி				- 2 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
 வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய்	- 1 டேபிள் ஸ்பூன்
 இஞ்சி				- 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 பூண்டு				- 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
 கரம் மசாலா பவுடர்			- 1 டீஸ்பூன்
 சீரகம்				- 1/2 டீஸ்பூன்
 மஞ்சள் பொடி			- 1/4 டீஸ்பூன்
 சிவப்புமிளகாய் பொடி			- 1 டீஸ்பூன்
 கறிவேப்பிலை			- 10 இலைகள்
 எலுமிச்சை ஜுஸ்			- 1/2 டீஸ்பூன்
 உப்பு				- தேவையான அளவு
 வெந்தய இலை 			- 1 கிண்ணம் (சுத்தம் செய்து நறுக்கியது)
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 கத்தரிக்காயை சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
 
 ஒரு வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் விட்டு, காய்ந்த பின்பு    நறுக்கிய கத்தரிக் காயைப் போட்டு வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதே எண்ணெயில் சீரகம் போட்டு வெடித்ததும், வெங்காயம் இஞ்சி பூண்டு போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
 
 தேவையானஅளவு உப்பு, கரம் மசாலா, மஞ்சள் பொடி போட்டு, சிறிது நேரம் வதக்கிய பின்பு, தக்காளி போட்டு வேக விடுங்கள். அத்துடன் வெந்தயக் கீரையைப் போட்டு வதக்குங்கள்.
 
 கடைசியில் வறுத்த  கத்திரிக்காயையும் போட்டு ஒன்று சேர பத்து நிமிடம் கிளறுங்கள். இதில் கறிவேப்பிலையைப் பொரித்துப் போட்டு அடுப்பிலிருந்து இறக்குங்கள். கடைசியில் எலுமிச்சை ஜுஸ் விட்டு கலக்கிக்கொள்ளுங்கள்.
 
 இதை சப்பாத்தி, சாதம் இவற்றுடன் கலந்து சாப்பிடலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கத்தரிக்காய் தேங்காய் பால் கிரேவி
 கத்தரிக்காய் சாலட்
 கத்தரிக்காய் துவையல்
 கத்தரிக்காய் எண்ணைய் கறி
 கத்தரிக்காய் பருப்பு அடைத்த கறி
 கத்தரிக்காய் ரசவாங்கி
 கத்தரிக்காய் பஜ்ஜி
 கத்தரிக்காய் ·ப்ரிட்டர்ஸ் (Fritters)
 கத்தரிக்காய் கறி (ஒவனில்)
 கத்தரிக்காய் காஸரோல் (Casserole)
 கத்தரிக்காய் பாஸ்தா
 கத்தரிக்காய் மசாலா கிரேவி
 மாதுளம்பழம்
 மாதுளம் பழம் ஐஸ் க்ரீம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |