| பிரட் வடை பிரட் இட்லி
 பிரட்- கோகோ ஸ்வீட்
 பிரட் கேரட் கட்லெட்
 அன்னாசிப்பழம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  பிரட் குலோப் ஜாமூன் 
 தேவையான பொருள்கள்
 பிரட் துண்டுகள்	-	10
 சர்க்கரை	-	2 கிண்ணம்
 எண்ணெய்	-	பொரிக்க
 தண்ணீர்	-	பாகு தயாரிக்க
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 இரண்டு கிண்ணம் தண்ணீரில் சர்க்கரையைக் கரைத்து அடுப்பில் வைத்து பாகு தயாரித்துக் கொள்ளுங்கள். பாகு இறுகாமல், கம்பிப் பதத்தில் இருக்க வேண்டியது அவசியம்.
 
 பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்து விடுங்கள். ஒரு வாயகன்ற கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதனுள் பிரட் துண்டுகளை, ஒவ்வொன்றாக லேசாக ஈரம்படும்படி முக்கியெடுத்துத் தண்ணீரை முழுவதுமாகப் பிழிந்து வேறொரு பாத்திரத்தில் போடுங்கள். இப்படித் தண்ணீரில் முக்கியெடுத்துப் பிழிந்த பிரட்டை மாவு பதத்திற்குப் பிசைந்து சின்னச்சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
 
 அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், உருட்டி வைத்த பிரட் உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொன் நிறத்திற்குப் பொறித்தெடுங்கள்.
 
 இந்த உருண்டைகள் சூடு ஆறியதும், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த சர்க்கரைப் பாகில் பொறித்த உருண்டைகளைப் போட்டுவிடுங்கள். சிறிது நேரம் பாகுத் தண்ணீரில் உருண்டைகளை ஊறவிட்டுப் பிறகெடுத்துச் சாப்பிட்டால் இனிப்பான குலோப் ஜாமூன் ரெடி!
 
 உலகம்மாள் கல்யாணசுந்தரம்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பிரட் வடை
 பிரட் இட்லி
 பிரட்- கோகோ ஸ்வீட்
 பிரட் கேரட் கட்லெட்
 அன்னாசிப்பழம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |