| மைசூர் லட்டு 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| நவரத்ன லட்டு 
 தேவையான பொருட்கள்
 தேங்காய்த்துருவல்	-	1/2 கிண்ணம்
 பாதாம்பொடி	-	1/4 கிண்ணம்
 வேர்க்கடலைப் பொடி	-	1/4 கிண்ணம்
 பொட்டுக்கடலைப் பொடி	-	1/4 கிண்ணம்
 முந்திரிப் பொடி	-	1/4 கிண்ணம்
 கோதுமை மாவு	-	1/4 கிண்ணம்
 கடலை மாவு	-	1/4 கிண்ணம்
 சர்க்கரை	-	2 கிண்ணம்
 எள் (வறுத்துப் பொடித்தது)	-	2 தேக்கரண்டி
 நெய்	-	1 கிண்ணம்
 ஏலக்காய்த்தூள்	-	சிறிதளவு
 
 செய்முறை
 கோதுமை மாவு, கடலை மாவு, தேங்காய்த்துருவல் இவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக்கொள்ளவும். இதை எல்லாப் பொடிகளுடன் போட்டு ஏலக்காய்த்தூள் போட்டுக் கலக்கவும். இதனுடன் சர்க்கரையைப் பொடியாக அரைத்துப் போட்டு, நெய்யைக் காய்ச்சி ஊற்றி உருண்டை பிடிக்கவும். முந்திரிப்பருப்பு வறுத்துப் போட்டும் பிடிக்கலாம். இது ஒரு சுவையான லட்டு. சத்தானதும் கூட.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மைசூர் லட்டு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |