| திடீர் காரக் கொழுக்கட்டை 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் அரிசி	-	ஒரு கிண்ணம்
 பயத்தம் பருப்பு	-	1/2 கிண்ணம்
 தேங்காய்த் துருவல்	-	3/4 கிண்ணம்
 வெல்லம்	-	1-1/4 கிண்ணம்
 பாதாம் (ஊறவைத்து அரைத்த விழுது)	-	2 தேக்கரண்டி
 முந்திரி	-	6
 ஏலக்காய்த் தூள்	-	1 தேக்கரண்டி
 நெய்	-	2 தேக்கரண்டி
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை அரிசி, பருப்பை வாணலியில் எண்ணெய் விடாமல் சிவக்க வறுக்கவும். கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு பாதாம் விழுதை அதில் போடவும். தேங்காய்த் துருவலை நெய்விட்டுச் சிவக்க வறுத்து மாவில் போடவும். முந்திரி வறுத்துப் போட்டு, ஏலக்காய்த்தூள், நெய் கொஞ்சம் விட்டுக் கலந்து வைக்கவும். வாணலியில் வெல்லம் போட்டுக் கொதிவந்ததும் மாவைக் கொட்டிக் கட்டியில்லாமல் கிளறி எடுக்கவும். அதை நெய் தொட்டுச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வெந்து எடுக்கவும். இதைச் செய்வது எளிது, தின்னச் சுவையோ சுவை.
 
 தங்கம் ராமசாமி,
 பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 திடீர் காரக் கொழுக்கட்டை
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |