| கோதுமை கார அல்வா 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| எளிதாகக் கோதுமை அல்வா 
 தேவையான பொருட்கள்:
 கோதுமை மாவு - 1 கிண்ணம்
 தேங்காய் (நன்கு அரைத்த) விழுது - 1 கிண்ணம்
 கெட்டிப் பால் - 1 கிண்ணம்
 நெய் - 2 மேசைக்கரண்டி
 வெல்லத்தூள் - 1 1/2 கிண்ணம்
 ஏலக்காய்த் தூள்
 முந்திரித் துண்டுகள்
 பாதாம் துண்டுகள்
 
 செய்முறை:
 கோதுமை மாவு, தேங்காய் விழுது, பால், நெய் ஆகியவற்றைஒரு நான்-ஸ்டிக் வாணலியில் இட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கலக்கவும். ஒரு கிண்ணம் நீரில், வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சிக் கொள்ளவும். அதை மாவுக் கலவையில் சேர்த்து, மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். நன்றாகத் திரண்டு ஒட்டாமல் வந்ததும், ஏலப் பொடியைச் சேர்க்கவும். நெய் தடவிய தட்டில்  கலவையைக் கொட்டிச் சமமாகப் பரப்பவும். முந்திரி, பாதாம் துண்டுகளால் அலங்கரித்து ஆறவிடவும். துண்டுளாக்கிப் பரிமாறவும்.
 | 
											
												|  | 
											
											
												| வசுமதி கிருஷ்ணஸ்வாமி, ரோச்செஸ்டர், மின்னசோட்டா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கோதுமை கார அல்வா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |