| சாண்ட்விச் இட்டிலி 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| பீட்ஸா தோசை 
 தேவையான பொருட்கள்:
 தோசை மாவு - 1 கிண்ணம்
 குடைமிளகாய (மெல்லிய வளையங்களாக) - 1/2 கிண்ணம்
 தக்காளி (வில்லைகளாக) - 1/4 கிண்ணம்
 வெங்காயம் (மெல்லிதாய் நறுக்கியது ) - 1/4 கிண்ணம்
 துருவிய சீஸ் - 1/4 கிண்ணம்
 கொத்துமல்லிச் சட்னி அல்லது மிளகாய்ப் பொடி - சிறிதளவு
 எண்ணெய் - 1 தேக்கரண்டி
 உப்பு - சிறிதளவு
 
 செய்முறை:
 தோசைமாவை தோசைக்கல்லில் எண்ணெய் விட்டுக் கொஞ்சம் கனமாக ஊற்றி மேலாக காப்சிகம், தக்காளி, வெங்காயம் இவற்றை வைத்து அதன்மேல் சீஸ் பரப்பி, சிறிது உப்பும் மிளகாய்ப் பொடியும் மேலாகத் தூவி ஒரு மூடியால் மூடவும். அடுப்பை நிதானமாய் எரிய விடவும். சீஸ் உருகி, காய்கள் வெந்ததும், கத்தியால் கீறி எடுத்துச் சாப்பிடலாம். தக்காளி அரைத்த விழுது இருந்தால் அதையும் மேலாக ஊற்றிச் செய்யலாம். இது மிகவும் சுவையான பீட்சா. குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சாண்ட்விச் இட்டிலி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |