| கோவைக்காய் துவையல் வாழைக்காய் பராத்தா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| தேவையான பொருட்கள் கோவைக்காய் (வில்லையாய் நறுக்கியது) - 1 கிண்ணம்
 வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கிண்ணம்
 தேங்காய் (பல்லுப்பல்லாய் நறுக்கியது) - 1/4 கிண்ணம்
 புளி - 1 எலுமிச்சை அளவு
 மிளகாய்த்தூள் - 2 தேயிலைக் கரண்டி
 மிளகாய் வற்றல் - 3
 பச்சை மிளகாய் - 2
 கடுகு - 1 தேக்கரண்டி
 கொத்துக்கடலை அல்லது பட்டாணி (ஊறவைத்து வெந்தது) - 1/2 கிண்ணம்
 கறிவேப்பிலை - சிறிதளவு
 மஞ்சள் தூள் - சிறிதளவு
 வெல்லம் - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 எண்ணெய் - தாளிக்க
 
 செய்முறை
 வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்து மிளகாய் வற்றல் பச்சைமிளகாய், கோவைக்காய், வெங்காயம், தேங்காய், கறிவேப்பிலை போட்டு, சுருள வதக்கவும். பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, மஞ்சள்பொடி, உப்பு, மிளகாய்ப்பொடி எல்லாம் போட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும்போது கொண்டக்கடலை, வெல்லம் சேர்த்து காயெல்லாம் நன்கு வெந்து எண்ணெய்க் கொதி வந்ததும் இறக்கவும். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சப்பாத்திக்கும் ஏற்றதாய் இருக்கும். தேவையானால் பூண்டு விழுது, மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூ ஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கோவைக்காய் துவையல்
 வாழைக்காய் பராத்தா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |