| ஜவ்வரிசி கிச்சடி ஜவ்வரிசி தயிர் பாத்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஜவ்வரிசி சூப் 
 தேவையான பொருட்கள்
 ஜவ்வரிசி - 1 கிண்ணம்
 மக்காச்சோளம் (வேக வைத்தது) - 1 கிண்ணம் (சிறியது)
 சோளமாவு - 1 தேக்கரண்டி
 மிளகுத் தூள் -  1 தேக்கரண்டி
 சீரகப் பொடி -  1 தேக்கரண்டி
 வெண்ணெய் -  1 தேக்கரண்டி
 பால் (சுண்டக் காய்ச்சியது) -  1 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 
 செய்முறை
 ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் ஒன்றிரண்டாகப் பொடி செய்யவும். மூன்று கிண்ணம் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். சோளமாவைக் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, வெந்த ஸ்வீட் கார்ன், பால், மிளகு, சீரகப் பொடி, வெண்ணெய், உப்பு எல்லாம் போட்டுச் சாப்பிடவும். இது ஒரு சுவையான சூப். உடம்புக்கு மிகவும் நல்லது. எளிதில் ஜீரணம் ஆகும்.
 | 
											
												|  | 
											
											
												| தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஜவ்வரிசி கிச்சடி
 ஜவ்வரிசி தயிர் பாத்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |