| பால் போளி பருப்புவடை (ஆமைவடை)
 வெண்பொங்கல்
 சர்க்கரை பொங்கல்
 ஊளுந்து வடை
 பொங்கல் குழம்பு
 மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு)
 தேங்காய் சாதம்
 தயிர்சாதம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  தேவையான பொருட்கள் 
 மைதா மாவு 		-	1 1/2 கிண்ணம்
 நல்லெண்ணெய் 		-	1 டேபிள் ஸ்பூன்
 மஞ்சள்பொடி 		-	சிறிதளவு
 
 இம்மூன்றையும் தண்ணீர் விட்டு மிருதுவாக சப்பாத்திக்கு பிசைந்து கொள்வதைப் போல் பிசைந்து கொள்ளவும்.
 
 கடலைபருப்பு 		-	1 கிண்ணம்
 துருவிய தேங்காய் 		-	1/3 கிண்ணம்
 பாகுவெல்லம் (தூளாக்கியது) 	-	2 கிண்ணம்
 ஏலக்காய் பொடி 		-	1/2 டேபிள் ஸ்பூன்
 | 
											
												|  | 
											
											
												| செய்முறை 
 முதலில் கடலைப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் அரை கப் தண்ணீரை சேர்க்கவும். பிறகு கழுவிய கடலைப்பருப்பை இரண்டு விசில் வரும் வரை  குக்கரில் வேக வைக்கவும். வேகவைத்தபின் அதிகப்படியான தண்ணீரை எடுத்துவிடவும். வேகவைத்த கடலை பருப்பை நன்றாக அரைத்து கொள்ளவும்.
 
 அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிறியதாக எரியவிட்டு, கெட்டியாக வரும் வரை வேகவைக்கவும். (பதமாக) துருவிய தேங்காயை அதில் சேர்க்கவும்.
 
 இப்போது அரைத்து வைத்த கடலை பருப்புடன்  இவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இதனுடன் ஏலக்காய் பொடியை கலக்கவும். பிறகு ஆற விடவும். இப்போது பூரணம் ரெடி.
 
 முதலில் பிசைந்து வைத்த மைதாமாவிலிருந்து சிறிது சிறிதாக உருண்டைகள் செய்து கொள்ளவும். எலுமிச்சம்பழ அளவில் பூரணத்தை எடுத்து மைதா உருண்டையின் நடுவில் வைத்து அதை மடித்து கொள்ளவும். எண்ணெய் தடவிய சுத்தமான பிளாஸ்டிக் பேப்பரில் இதை வைக்கவும். மெதுவாக சப்பாத்தி வடிவத்தில் கைகளினால் செய்யவும். பிறகு ஒவ்வொன்றாக தோசை தாவாவில் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும். போளியின் மேல்பகுதியில் நெய்யை தடவவும்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பால் போளி
 பருப்புவடை (ஆமைவடை)
 வெண்பொங்கல்
 சர்க்கரை பொங்கல்
 ஊளுந்து வடை
 பொங்கல் குழம்பு
 மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு)
 தேங்காய் சாதம்
 தயிர்சாதம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |