| மாங்காய் தோசை மாங்காய் லஸ்ஸி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| மாம்பழ சூப் 
 தேவையான பொருட்கள்
 மாம்பழக் கதுப்பு (நறுக்கியது) - 2
 தக்காளித் துண்டுகள் - 1/2 கிண்ணம்
 இஞ்சித் துருவல் - 1/2 தேக்கரண்டி
 கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 பச்சை வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 4
 பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1
 சோளமாவு - 1 மேசைக்கரண்டி
 சமையல் எண்ணெய் - சிறிதளவு
 உப்பு - தேவைக்கேற்ப
 கொத்துமல்லித் தழை - சிறிதளவு
 
 செய்முறை
 நான்ஸ்டிக் பானில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வெங்காயத்தாளை வதக்கிக் கொள்ளவும். அதில் மாம்பழக் கதுப்பை ஸ்கூப்பரால் தோண்டிப் போட்டு, தக்காளித் துண்டுகள், இஞ்சித் துருவல், உப்பு, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கி நன்றாகக் கலக்கவும். இதில் நான்கு கிண்ணம் தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
 
 தக்காளி வெங்காயம் குழைய வெந்தபிறகு சோளமாவைச் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து விடவும். கரம் மசாலா போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிடவும். மேலாகப் பச்சை கொத்துமல்லித் தழையை பொடியாக நறுக்கித் தூவவும். நாவில் நீர் சொட்ட வைக்கும் மாம்பழ சூப் தயார்!
 | 
											
												|  | 
											
											
												| பிரேமா நாராயணன், கேன்டன், மிச்சிகன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மாங்காய் தோசை
 மாங்காய் லஸ்ஸி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |