| முந்திரி பர்ஃபி மைக்ரோவேவ் பால்கோவா
 தட்டை
 மைதா முறுக்கு
 தீபாவளி மருந்து
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  தேவையான பொருட்கள் 
 பால்			- 1 லிட்டர்
 சர்க்கரை			- 1 கிண்ணம்
 கேசரி பவுடர் 		- ஒரு துளி
 வறுத்த முந்திரி பருப்புத் துண்டுகள் 	- 20
 
 செய்முறை
 
 கனத்த அடிப்பகுதி உள்ள பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடாக்கவும்.
 
 கொதிநிலைக்கு வந்தபின் தீயைக் குறைத்து, மேலும் சிறிது நேரம் அப்படியே சூடாக விடவும். பாலில் உள்ள க்ரீம் ஒரு படலமாக மிதக்கத் தொடங்கும்.
 
 மேலாக மிதக்கும் க்ரீமை எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அரை கோப்பை பால் மட்டும் மீதமிருக்கும் வரை, இதே முறையில் க்ரீமை சேகரிக்கவும். மீதமுள்ள பால் மிக அடர்த்தியாக இருக்கும்.
 
 அதனுடன் சர்க்கரை மற்றும் கேசரி பவுடர் சேர்த்து கலக்கவும். சர்க்கரை சேர்த்த பிறகு பால் சற்று இளகி அடர்த்தி குறையும்.
 
 பால் மீண்டும் கெட்டிப்படும் வரை சூடாக்கவும் / கலக்கவும்.
 | 
											
												|  | 
											
											
												| பின்னர் அதை ஆற விடுங்கள். 
 தனியே சேகரித்த க்ரீமை அதனுடன் மீண்டும் சேர்க்கவும். வேகமாகக் கலக்குவதைத் தவிர்க்கவும்.
 
 வறுத்த முந்திரிப் பருப்புத் துண்டங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
 ஏலக்காய் பவுடர் ஒரு துளி சேர்த்துக் கொள்ளலாம்.
 
 ·பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.
 
 சரஸ்வதி தியாகராஜன்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 முந்திரி பர்ஃபி
 மைக்ரோவேவ் பால்கோவா
 தட்டை
 மைதா முறுக்கு
 தீபாவளி மருந்து
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |