|
| 'எப்போதும் இப்படியே இருக்காது' |
   |
- | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
புலன்கள்தாம் எதிரிகள். அவை நீங்கள் உபாதிதான் (உடலாகிய கொள்கலன்தான்) என்கிற மாயையை ஏற்படுத்துகின்றன. காளையை மூக்கணாங் கயிற்றாலும், குதிரையைக் கடிவாளத்தாலும், யானையை அங்குசத்தாலும் கட்டுப்படுத்துவது போலப் புலன்களை புத்தியால் அடக்குங்கள்.
பாண்டவர்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இமயமலையில் ஏறிக் கொண்டிருந்தபோது, தர்மராஜா கவலையால் மனம் பாதிக்கப்பட்டிருந்தார், எனவே தங்களுடன் சிறிது நேரம் செலவிடுமாறு கிருஷ்ணரிடம் அவர் பிரார்த்தனை செய்தார். அவர்கள் தமது இருப்பிடத்தை விட்டு வெளியேறும்போது கிருஷ்ணர் தர்மராஜாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தார். மகிழ்ச்சி அல்லது துக்கத்தால் எப்போது பாதிக்கப்பட்டாலும் அப்போதெல்லாம் அதைத் தனக்குள் படித்துப் பார்க்கச் சொன்னார்.
அந்தச் சீட்டில் 'எப்போதும் இப்படியே இருக்காது' என்று எழுதப்பட்டிருந்தது. மனக் கொந்தளிப்பை அமைதிப்படுத்த இது ஒரு வழியாகும்.
நன்றி: சனாதன சாரதி, ஜூலை 2025 |
|
|
| பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|
|
|
|