|
தவறுக்கு வருந்திய நாய் |
   |
- | செப்டம்பர் 2025 |![]() |
|
|
|
 |
ஸ்ரீராமர் தனது அவதார வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து, முடிவு செய்து, வெள்ளம் பெருக்கெடுத்த சரயூ நதிக்குள் இறங்கியபோது, ஒரு நாயும் அவரோடு சென்ற கூட்டத்தைப் பின்தொடர்ந்தது. அது ஏன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்து கொண்டது என்று கேட்டபோது, அது கூறியது: "நான் உங்கள் அனைவருடனும் சொர்க்கத்தில் நுழைய விரும்புகிறேன். என் முற்பிறவியில், நான் ஒரு முழுமையான யோகியாக இருந்தேன்; ஆனால் நான் புலனடக்கப் பாதையிலிருந்து நழுவினேன், அகந்தைக்கு அடிமையானேன்; என் மனதில் தோன்றியபடி வேதங்களை விசித்திரமான ஆனால் கவர்ச்சிகரமான வழிகளில் விளக்கினேன். எனவே, நான் இப்போது குரைப்பதிலும் கடிப்பதிலும் ஊளையிடுவதிலும் மகிழ்ச்சி அடையும் இந்த விலங்காக மாறிவிட்டேன். அன்று என்னைப் புகழ்ந்து ஊக்குவித்தவர்கள், இப்போது என் தோலில் மொய்த்துத் தொந்தரவு செய்யும் உண்ணிகளும் ஈக்களுமாக உள்ளனர். இறைவா! இந்த இழிநிலையிலிருந்து தப்பிக்க எனக்கு உதவி செய்யும்; நான் என் கர்மாவை முடித்துக் கொண்டேன்; நான் என் தண்டனையை அனுபவித்து முடித்துவிட்டேன்".
வேதங்களுக்குக் காட்டப்படும் அவமரியாதையின் விளைவு அது. பயபக்தியோடும் அது கற்பிப்பதைச் செயல்படுத்தும் நோக்கத்துடனும் அவற்றைப் படியுங்கள். கடைப்பிடிக்காமல் இருப்பதே அவமரியாதையானது.
நன்றி: சனாதன சாரதி, மே 2025 |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|