|
அவருக்குச் 'சொந்தமான' பாறை |
   |
- | ஆகஸ்டு 2025 |![]() |
|
|
|
 |
ஹரித்வாருக்கு அருகில் ஒரு துறவி இருந்தார், அவர் நெடுங்காலமாக இல்லறத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்; அவர் தான் சேகரித்த உணவு அனைத்தையும் கங்கைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த ஒரு தட்டையான பாறையில் குவித்து வைத்து, அதையே ஒரு தட்டாகப் பயன்படுத்தினார், அதில்தான் அவர் உண்பார்.
ஒருநாள் அவர் தனது பாறைக்குத் திரும்பி வந்தார். அங்கு வேறொரு துறவி அமர்ந்து உணவு உண்பதைக் கண்டார். தனது 'சொத்தில்' அத்துமீறி நுழைந்ததாக ஆத்திரப் பட்டார்.
அந்தப் புதியவர், "ஐயோ! 'நான், எனது' என்ற எல்லா உணர்வையும் துறந்துவிட்டாய்; முந்தைய நண்பர்கள் அடையாளம் காணமுடியாதபடித் தலையை மொட்டையடித்துக் கொண்டாய்; எல்லா பந்தங்களிலிருந்தும் விடுபடத் தவிக்கிறாய். ஆனால், இந்தப் பாறையோடு உன்னைச் சேர்த்துக் கட்டிப் போட்டுக் கொண்டாயே! பாறையைக் கழுத்தில் கட்டிக்கொண்டு எப்படி இந்த சம்சாரக் கடலை நீந்திக் கடக்க முடியும்? போலி வாழ்க்கை நடத்துகிறாயே" என்றார்.
துறவியின் கண்கள் திறந்தன. |
|
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா |
|
|
|
|
|
|
|