|  | 
											
											
												| 
                                                        
	                                                        | நகைச்சுவை துணுக்குகள் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூன் 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  நோயாளி: பிரிஸ்கிரிப்ஷன்ல இருக்கற எல்லா மருந்தையும் வாங்கிட்டேன், மேல எழுதியிருக்கறது மட்டும் என்னன்னு புரியல்லை. 
 டாக்டர்: ஓ, அதுவா! அது பிள்ளையார் சுழி.
 
 *****
 
 நோயாளி: டாக்டர், எனகென்னவோ எப்பவும் பயமாயிருக்கு, தற்கொலை செஞ்சுக்கலாமான்னு தோணுது.
 
 டாக்டர்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம். எங்கிட்ட வந்துட்டீங்க இல்ல, நான் பாத்துக்கறேன்!
 
 *****
 
 நோயாளி: விட்டு விட்டு இருமல் வருதுங்கறதுக்காக நீங்க கொடுத்த மருந்தைச் சாப்பிட்டேன்.
 
 டாக்டர்: இப்போ சரியாப் போயிருக்குமே!
 
 நோயாளி: இப்போ தொடர்ச்சியா இருமறேன்.
 
 டி.எஸ்.பத்மநாபன்
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| நோயாளி: டாக்டர் மூச்சுவிட்டால் மாரை வலிக்கிறது. 
 டாக்டர்: ஒரே மாத்திரையில் இரண்டையும் நிறுத்தி விடுகிறேன். கவலைப்படாதீங்க.
 
 அட்லாண்டா ராஜன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |