|  | 
											
											
												| 
                                                        
	                                                        | சிரிக்க மறந்துடாதீங்க! |    |  
	                                                        | - சுதர்ஸன் ![]() | ![]() செப்டம்பர் 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க? 
 ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
 
 வெ. சந்திரசேகரன்,
 சன்னிவேல், கலி·போர்னியா
 
 ******
 
 ''அடிக்கடி டென்ஷன் ஏன்?''
 
 ''பென்ஷன் லேட்டா வருது.''
 
 ******
 
 ''போன் பில் போனமாசம் இருநூறு வந்தது. இப்ப, ரெண்டாயிரத்து இருநூறு வந்திருக்கு!''
 
 '' ஓ! ஊருக்குப் போன உன் மனைவி திரும்ப வந்தாச்சா!'
 
 ******
 
 ''ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
 
 ''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''
 
 ''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''
 
 ******
 | 
											
												|  | 
											
											
												| ''பார்ட்டி வச்சிருக்கேன்! அவசியம் நீங்க வரணும்.'' 
 ''ஓ.கே. எந்த ஓட்டல்ல? எப்போ?''
 
 '' அடுத்த வாரம்  ஸன்டே கலிபோர்னியா பல்கலைக்கழக கேண்டினில்...''
 
 ******
 
 எலும்பு முறிவு டாக்டர் வீடு எங்கே சார் இருக்கு?
 
 ******
 
 இதென்ன! அந்த கடைக்கு புதுமையா ஆம்பளைங்க சமாசாரம் பேர் வச்சிருக்காங்க...''
 
 ''கிரைண்டர், மிக்ஸி, குக்கர் விற்கிறார்கள்...''
 
 ******
 
 ''உங்க கற்பனையில் உதித்த கிஸ்கிஸ்தான்; புஸ்புஸ்தான்னு நீங்க எழுதிய திரைப்பட பாடலுக்கு  நாலுபேர் உரிமை கொண்டாடுறாங்களே! எப்படி?''
 
 ''அது குளோனிங் கற்பனை சார்!''
 
 ******
 
 “ஐநூறு பக்கத்துக்கு ஒரு சிறுகதை எழுதி இருக்கேன் சார்!''
 
 ''யம்மாடி! அது வேண்டாம்; ஒரு ஜோக் எழுதித்தாங்க போதும்!''
 
 '' ஓ.கே.! அம்பது பக்கத்துலே ஒரு ஜோக் எழுதித்தறேன்! சரியா!''
 
 சுதர்ஸன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |