|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  அம்மா: அப்பா பூஜை செய்கிற நேரம் வந்தாச்சு. பூவை எட்டறவரை பறிடா மகன்: இப்பவே மணி எட்டாச்சு. நான் ஸ்கூல்ல ஒன்பது மணிக்கு இருக்கணும். என்னால எட்டரை வரைக்கும் பறிக்கமுடியாது.
 
 *****
 
 தாத்தா: (வெளியூர் கிளம்பும் அவசரத்தில்) எல்லாருக்கும் முன்னாடி நான் குளிச்சுடறேனே.
 குறும்புக்காரப் பேரன்: எல்லாருக்கும் முன்னாடியெல்லாம் வேண்டாம். பாத்ரூமில் போய் குளியுங்க!
 
 *****
 
 வீட்டுக்காரர்: (காப்பி குடிக்க ஆரம்பிக்கும் விருந்தாளியிடம்) இன்னொரு தம்ளர் வேணுங்களா?
 விருந்தாளி: (கூச்சத்துடன்) இதுவே அதிகம், இன்னொரு தம்ளர் வேண்டாங்க.
 வீட்டுக்காரர்: அதில்லீங்க, ஆத்தறத்துக்கு இன்னொரு தம்ளர் வேணுமான்னு கேட்டேன்.
 விருந்தினர்: அப்படி ஒண்ணும் எனக்கு ஆத்திரமில்லீங்க!
 | 
											
												|  | 
											
											
												| எஸ். நரசிம்மன், அட்லாண்டா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |