|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  அதிகாரி: டாக்டர்! நீங்க ஆபரேஷன் செஞ்ச பில்லைப் பார்த்தா, போன மாரடைப்பு திரும்பி வந்துடும் போலிருக்கே! 
 டாக்டர்: அது ஒண்ணுமில்லீங்க. நான் இந்த கிளினிக் கட்டும்போது நீங்க லஞ்சம் கேட்டப்பவும் எனக்கு அப்படித்தான் இருந்துச்சு.
 
 *****
 
 மருமகள் 1: போன வருஷம் என் மாமியார் மூணு மாசம் அமெரிக்கா வந்து எங்க வீட்ல தங்கி இருந்தாங்க. ஒரு சண்டை, சச்சரவு இல்லை தெரியுமா?
 
 மருமகள் 2: அப்படியா! எப்படி சமாளிச்சே?
 
 மருமகள் 1: நான்தான் அந்த மூணு மாசமும் இந்தியாவுக்குப் போய்ட்டேனே!
 
 *****
 
 மனைவி: போன மாசம் நீங்க எழுதின கதையை நூறு பத்திரிகைக்கு மேல அனுப்பினீங்களே. அட்லீஸ்ட் கதைத் தலைப்பாவது பிரசுரமாச்சா?
 
 கணவன்: ஆச்சு... கின்னஸ் புத்தகத்துல.
 | 
											
												|  | 
											
											
												| தமிழ்மேகம், மிச்சிகன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |