|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜூன் 2011: ஜோக்ஸ் |    |  
	                                                        | - ஹபீப் ![]() | ![]() ஜூன் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  மனைவி: பசங்ககிட்ட சொல்லிட்டேன், இந்த விநாடியிலிருந்து வீட்ல தமிழ்ல மட்டும்தான் பேசணும்னு. கணவர்: வெரிகுட். பசங்க என்ன சொன்னாங்க?
 மனைவி: 'OK Mom'னு சொல்லிருக்காங்க… பார்க்கலாம்.
 
 *****
 
 நோயாளி: டாக்டர்...உங்களுக்கு உடம்பு முடியலேன்னா எங்கே போவீங்க?
 டாக்டர்: எனக்குத் தெரிஞ்ச நல்ல டாக்டர்கிட்ட போவேன்... ஏன் கேக்கறிங்க?
 நோயாளி: கொஞ்சம் அந்த நல்ல டாக்டர் நம்பர் கொடுக்கிறீங்களா!
 
 *****
 
 தொண்டர் 1: புது மந்திரியப் பார்த்து மனு கொடுக்க எப்படிப் போகணும்?
 தொண்டர் 2: பெட்டி நெறய பணத்தோட....
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| தொண்டன் 1: தலைவர் ஏன் M.P.ங்கிறத பெயருக்குப் பின்னாடி போடாம முன்னாடி போட்டிருக்காரு! தொண்டன் 2: அவரு முன்னாள் M.P.யாம், அதனாலதான்.
 
 *****
 
 தொண்டன் 1: நடந்து முடிஞ்ச தேர்தலில தலைவரு ஒரு வோட்டுல தோத்துட்டாராம்!
 தொண்டன் 2: அடடா! இப்போ என்ன பண்ணப் போறாராம்?
 தொண்டன் 1 : எப்படி கள்ள வோட்டுப் போடுறதுன்னு கத்துக்கப் போறாராம்.
 
 *****
 
 பெரியவர்: போன தடவ அமெரிக்கா வந்தபோது சாப்பிட்ட போண்டா இருக்கா?
 சர்வர்: கவலப்படாதீங்க! அதுக்கு முன்னாடி அமெரிக்கா வந்தப்ப சாப்பிட்ட போண்டாவே இருக்கு.
 
 மிச்சிகன் ஹபீப்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |