|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜூலை 2010: ஜோக்ஸ் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜூலை 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| அப்பா: அப்பா சொன்னா கேட்கணும் இல்லாட்டி நீ உருப்படவே மாட்டே. மகன்: அதை இப்போ நினைச்சு என்ன பிரயோஜனம். தாத்தா செல்லும்போது நீங்கள் கேட்டிருக்கணும்.
 
 சரவணன்
 
 *****
 
 ஒருவர்: என்ன சார்! புது வீட்டுக்கு செண்ட் அடிக்குறீங்க?
 மற்றொருவர்: இது வியர்வை சிந்தி கட்டின வீடு சார்!
 
 சரவணன்
 
 *****
 
 ஒருவர்: அவர் உண்மையான டாக்டரான்னு எனக்கு சந்தேகமாக இருக்கு.
 மற்றொருவர்: ஏன் அப்படி கேட்குறே?
 ஒருவர்: போஸ்ட்மார்ட்டம் முடிச்சுட்டு, பேஷண்ட் முழிச்சதும் சாப்பிட எதாவது கொடுங்கன்னு சொல்லிட்டு போறார்.
 
 சரவணன்
 
 *****
 
 நோயாளி: டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைப்பேனா?
 டாக்டர்: ஒரு ஆபரேஷன்ல எத்தனை பேர்தான் பிழைக்கிறது?
 
 சரவணன்
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| ஒருவர்: அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... மற்றவர்: அவர்தாங்க சாரதி.
 முதலாமர்: ஓ! ‘பார்த்த’ சாரதியா!
 
 நூரணி சிவம்,
 ட்ராய், மிச்சிகன்
 
 *****
 
 மும்பை ரயில் நிலையத்தில் நண்பரை வழியனுப்ப நின்று கொண்டிருந்தேன். அது தானா வழியாகப் போகும் ரயில். ரயில் புறப்படும் நேரத்துக்குத் தமிழர் ஒருவர் ஓடி வந்து நண்பரிடம் “சார், இந்த ரயில் தானா போகுமா?” என்று கேட்டார். உடனே நண்பர் “இல்லைங்க, யாராவது ஓட்டினால்தான் போகும்” என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.
 
 நூரணி சிவம்,
 ட்ராய், மிச்சிகன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |