|  | 
											
											
												| 
                                                        
	                                                        | பிப்ரவரி 2010: ஜோக்ஸ் |    |  
	                                                        | - ![]() | ![]() பிப்ரவரி 2010 ![]() |   ![]() | ![]() (1 Comment) |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| டாக்டர்: போன தடவை நீங்க கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சு. நோயாளி: நீங்க குணப்படுத்தினதா சொன்ன வயித்து வலியும்தான்.
 
 *****
 
 "டாக்டர், பையன் லட்டை முழுங்கிட்டான். ஆபரேஷன் பண்ணியாவது வெளியில எடுத்திடுங்க."
 "லட்டுக்கு ஏன் இந்தப் பயம் பயப்படறீங்க?"
 "ஐயோ அது வேட்பாளர் தந்த லட்டு. உள்ளே வைர மோதிரம் வெச்சிருக்காறாம்."
 அதிரை யூசஃப்,
 சன்னிவேல், கலி.
 
 *****
 
 இலக்கணத் தாளில் ஒரு கேள்வி:
 "ஓர் அழகான பெண் சாலையில் நடந்து போகிறாள்" - இதை வியப்புச் சொற்றொடராக மாற்றுக.
 பதில்: "வாவ்!"
 
 *****
 
 "கட்டுடல் பயில்வான் கட்டில்ல இருந்து கீழே விழுந்துட்டார்..."
 "அப்புறம்?"
 "ஆஸ்பத்திரியில ‘கட்டு' உடலோட இருக்கார்!"
 அதிரை யூசுப்,
 சன்னிவேல்
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| ஒருவன்: சூரியனா, டெல்லியா, எது அதிக தூரம்? மற்றவன்: உன் கண்ணுக்கு டெல்லி தெரியுதா?
 
 *****
 
 என்னங்க "இன்றைய கூட்டு"ன்னு தலைப்பு எழுதி இருக்கீங்க. கீழே என்ன கூட்டுன்னு எழுதலே. இது என்ன ஓட்டல்?
 
 இது ஓட்டல் இல்ல. கட்சி அலுவலகம். இன்னிக்கு எந்த கட்சியோட கூட்டணில இருக்கோம்னு எங்களுக்குத் தெரிஞ்ச உடனே எழுதி வைக்கறோம்.
 எல்லே சுவாமிநாதன்
 
 *****
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |