|  | 
											
											
												| 
                                                        
	                                                        | ஜனவரி 2010: ஜோக்ஸ் |    |  
	                                                        | - ![]() | ![]() ஜனவரி 2010 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| அம்மா: டேய், சிவா! பாட்டியைக் கொஞ்சம் கூப்பிடு. 
 சிவா: பாட்டி கொஞ்சம் இங்க வா!
 
 அம்மா: முட்டாள். பெரியவங்களை எப்பவுமே மரியாதையாக் கூப்பிடணும்.
 
 சிவா: சரிம்மா. (உரக்க) பாட்டி, மரியாதையா இங்க வா....
 
 தெனாலி
 
 *****
 
 ராஜேஷ்: ஏண்டா தலைக்கடியில டிக்ஷனரியை வச்சிக்கிட்டு தூங்கற?
 
 கேசவ்: எப்பப் பார்த்தாலும் தூக்கத்துல ஒரே அர்த்தமில்லாத கனவா வருது. அதான்...
 
 தெனாலி
 
 *****
 
 சங்கீத ஜோக்ஸ்
 
 சபா செக்ரடரி: ரசிகப் பெருமக்களுக்கு ஓர் அறிவிப்பு. உங்கள் வசதியைக் கருதி இன்று தனி ஆவர்த்தனம் சபா கேண்டீனிலேயே நடைபெறும். நன்றி.
 
 நூரணி சிவம்,
 டிராய், மிச்சிகன்
 
 *****
 | 
											
												|  | 
											
											
												| பாடறது யாரு? 
 மங்களம் பாடறாங்க...
 
 அதுக்குள்ளயா? இப்பதான் கச்சேரி தொடங்கிச்சு...!
 
 இல்லை சார், பாடறவங்க பேரு மங்களம்னு சொன்னேன்.
 
 நூரணி சிவம்,
 டிராய், மிச்சிகன்
 
 *****
 
 அவர் என்ன பாடறார், வெறும் புஸ்புஸ்னு காத்துதான் வருது!
 
 'காற்றினிலே வரும் கீதம்'.
 
 நூரணி சிவம்,
 டிராய், மிச்சிகன்
 
 *****
 
 ஏன் சார் கல்யாணியை இப்படிக் கொல்றாரு?
 
 அதுவா, அவர் ஒய்ஃப் பேரும் கல்யாணியாம், அதான்.
 
 நூரணி சிவம்,
 டிராய், மிச்சிகன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |