|  | 
											
											
												| 
                                                        
	                                                        | சிரிப்பதா, அழுவதா, பெருமைப்படுவதா....? |    |  
	                                                        | - எச்.ஆர் ![]() | ![]() நவம்பர் 2001 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| நாங்கள் டில்லியில் இருந்தோம். மிசிகனிலிருந்து எங்கள் மகளும் மருமகனும் எங்களை அமெரிக்கா வருமாறு அழைத்ததும் அளவு கடந்த ஆனந்தம் கொண்டோம். எங்களுக்கு முதல் அமெரிக்க பயணம். பேரனோ, பேத்தியோ பிறக்கப்போகிற உற்சாகம் வேறு. தேவையான ஏற்பாடுகளுடன் ஜாலியாக கிளம்பினோம். 
 மெக்சிகன் வந்து மூன்று வாரங்களில் மகளுக்கு பிரசவ வலி எடுக்கவும் birthing entre-ல் 'அட்மிட்' செய்து 15 மணி நேரம் கவலையுடன் காத்திருந்தோம். திடீரென்று ஒரு நர்ஸ், அழைக்கவும் திரும்பினோம். Congratulatioins, உங்களுக்கு அழகான ஒரு பேரன் பிறந்திருக்கிறான் என்று முகமலர்ச்சியுடன் கூறினாள். தங்க விக்ரகம் போன்ற குழந்தையைப் பார்த்து பரவசம் அடைந்தோம். ஒவ்வொரு நர்ஸ¤ம் வந்து ''ஓ'', எத்தனை அழகான தலைமுறை, beautiful baby'' என்று கூறியது கேட்டு பெருமைப்பட்டோம்.
 
 வீட்டிற்கு அழைத்து வந்த பிறகும் குழந்தையை கொஞ்சுவதும் போட்டோக்கள் எடுப்பதுமாக ஆனந்தகூத்துதான். birthing centreல் நர்ஸ்கள், டாக்டர்கள் கவனித்துகூ கொண்ட விதத்தை தினமும் பாராட்டுவதும் புகழ்வதுமாக நன்றி கூறி வந்தோம்.
 
 அடுத்த மாதம் தான் எங்களுக்கு ஒரு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. திடீரென்று ஒருநாள் இரவு 12.30 மணிக்கு என் கணவர் வயிற்று வலியால் துடிக்கவும் நான் கலங்கிவிட்டேன். ஏதோ எனக்குத் தெரிந்த சில வீட்டு வைத்தியங்களை கொடுத்தும் பார்த்தேன். ஓமம், சீரகம் கஷாயம் இத்யாதி, எதற்கும் கேட்கவில்லை. கவலையுடன் மகளையும் மருமகளையும் எழுப்பினேன். மணி அப்பொழுது காலை 4.30. அவர்கள் 'ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர்களிடம் காட்டிவிடலாம்'' என்றனர். 'சரி' என்றோம்.
 
 காலை 7 மணி. மிசிகனின் பெயர் பெற்ற BUTTERWORTH SPECTURM HEALTH CENTREன் EMERGENCY ROOMல் நேரே நுழைந்தோம். ஒரு சில டெஸ்ட்கள் செய்து பார்த்துவிட்டு என் கணவரை உன் ஒரு வீல் சேர் அமர்த்தி உள்ளே அழைத்துச் சென்றனர். மனதில் கவலை, பீதியுடன் நாங்களும் பின்னாலேயே தொடர்ந்தோம்.
 
 காலை 10 மணி வரை நர்ஸ்களும், டாக்டர்களும் ஏதேதோ Equipments உடன் வந்து பல டெஸ்டுகள் செய்வதும் எழுதுவதுமாக இருந்தனர். சுமார் 11 மணிக்கு டாக்டர். டாட் பர்ரி எங்களிடம் வந்து விவரித்தார். ''இருதயம், நுரையீரல், சிறுநீரகம எல்லாம் சரியாக இயங்குகின்றன. வயிற்றில் தான் கோளாறு என்பது எங்கள் முடிவு. எக்ஸ்ரேயில் துவாரம் தெரிகிறது. அதை உடனே அடைக்க வேண்டியது மிக அவசியம் . அசுத்த திரவங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நல்ல காலமாக நீங்கள் காலந்தாழ்த்தாமல் அழைத்து வந்தீர்கள். He is very very sik. he is pretty serious you know என்றார். எங்கள் வயிற்றில் புளி கரைத்தது. Surgeryக்கு சம்மதம் தெரிவித்தோம். வீட்டிலிருந்த மகளுக்கும் அப்பொழுதுதான் விபரங்கள் தெரிவித்தோம்.
 | 
											
												|  | 
											
											
												| மாலை மணி 4. டாக்டர் பர்ரி எங்களைத் தேடி வந்து ''ஆப்பரேஷன் 3 மணிநேரம் பிடித்தது. He is fine. கவலைப்படாதீர்கள். நான் முன் கூறியபடி வயிற்றில் துவாரம் இருந்ததை அடைத்து விட்டோம். நீங்கள் அந்த அறையில் போய் பார்க்கலாம்'' என்றார். அறைக்குள் நுழைந்து பார்த்தபொழுது என் கணவர் மயக்க நிலையில் இருந்தார். ஆஸ்பத்திரிக்கு போயிராத எங்களுக்கு, இப்படி வந்த இடத்தில் உடல்நலம் குன்றி அவஸ்தை படணுமா என்று வருத்தப்பட்டேன். நான்கு வாரங்கள் ஆஸ்பத்திரியிலும் பின் 3 வாரங்கள் iv tubes உடன் வீட்டிலும் treatment எடுத்துக் கொண்டார். தற்போது நார்மலாகி விட்டார். 
 4 வாரங்கள் ஆஸ்பத்திரியில் நான் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை இருந்து வந்த பொழுது நர்ஸ்களும் டாக்டர்களும் அயராது உழைப்பதை பார்த்து வியந்தேன். 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற சொற்றொடரின் இலக்கணமாக திகழும் இவர்கள் தங்களது தொழிலில் காட்டும் ஆர்வமும், நேர்மையும், பொறுமையுடன் நோயாளிகளை கவனித்துவரும் பண்பும், எச்சரிக்கையுடன் தங்கள் பணிகளை செவ்வனே செய்யும் திறமையும் பெற்று விளங்குவது என்னை மிகவும் கவர்ந்தது.
 
 'டிஸ்சார்ஜ்' செய்த நாளன்று டாக்டரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு, ''டாக்டர் உங்களது இந்த உதவியை எங்கள் வாழ்நாளில் ஒரு பொழுதும் மறக்க முடியாது. என் கணவர் பிழைத்து எழுந்து புனர்ஜன்மம் தான் எடுத்திருக்கிறார். எங்கள் நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறி விடை பெற்றோம். டாக்டரோ, மிகமிக அடக்கமாக, ''நான் என் வேலையை செய்தேன். கடவுள் அருளும் சேர்ந்தது'' என்றார்.
 
 கடந்த இரண்டு மாதங்களில் நாங்கள் பட்ட அவஸ்தையை நினைத்துப் பார்க்கும் பொழுது எங்களுக்கு சற்று வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. ஆம். ஆஸ்பத்திரியில் மயக்க நிலையில் இருந்த பொழுது என் கணவர் நர்ஸ்களை ஹிந்தியிலும் தமிழிலும் ஏதேதோ கேட்பதும் உளறுவதும் திட்டுவதுமாக இருந்ததை நினைத்து சிரிப்பதா, 7 வாரங்களில் சிகிச்சைக்கான இன்ஷ¥ரன்ன்ஸ் பில் எக்கச்சக்கமான எவரெஸ்ட் மலையை விட உயரத்தில் ஏறிவிட்டதை கேட்டு கலங்கி அழுவதா, குட்டுபட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என்பார்களே, அது போல் அமெரிக்காவில் டிரீட்மென்ட் என்று தான் பெருமைப்படுவதா என்று புரியாமல் குழம்பியிருக்கிறோம்.
 
 எச்.ஆர்.
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |