|  | 
											
											
												|  | 
                                            
											
											
												| என்ன ஜாதி நீங்கள் என்றா கேட்டாய்
 முதலில் நான் பெண் ஜாதி
 முடிவில்தான் பெஞ்சாதி
 
 கருவின் நான் மனித ஜாதி
 கருத்தில் நான் கலப்பு ஜாதி
 உயிரை மதிப்பதால்
 உண்மையில் உயர்ந்த ஜாதி
 பொன்னும் பொருளும் இல்லாததால்
 
 பொருளாதாரத்தில் கீழ் ஜாதி
 நல்ல குணங்கள் என்று
 நான் நினைப்பதை
 நாளும் கடைப்பிடிப்பதால்
 நானிலத்தில் நான் நல்ல ஜாதி
 | 
											
												|  | 
											
											
												| பாமா கச்சிராயன் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |