|  | 
											
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| ஊரிலிருந்து வந்திருக்கும் ரமேசிடம் அக்கறையோடும்
 அன்போடும்
 வாஞ்சையோடும்
 வெள்ளந்தியாய்
 கொடுத்தனுப்பியிருக்கிறாள்
 பேரக்குழந்தையை மனதில் வைத்து
 கட்டத் தேவையில்லாத தொட்டிலுக்காய்
 தனது நூல்சேலையில் ஒன்றை!
 
 அம்மாவின் வாசத்தில்
 மெல்லிய இறகாகி
 வானில் தவழும்
 சுகமோ சுகம்
 விரித்துப் போட்டு
 அதன்மேல் படுத்துறங்கும்
 குழந்தையாகிப் போன எனக்கு!!
 | 
											
												|  | 
											
											
												| பழமைபேசி, கோலியர்வில், டென்னசி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |