| எச்சம் வர்ண சிநேகிதம்
 ஜன்னல் மனிதர்கள்
 விளையாட்டு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												|  கைரேகை மேடுகளில் உணவு தேடினான்.....
 பசித்த வயிற்று ஜோசியன்!
 
 விட்டு விட்டு ஓடிப்போனது
 உழைத்துச் சேர்த்த பணம்
 கூடவே வருகிறது நிலா!
 
 இயேசு கன்னம் காட்டினார்
 நபி முதுகு காட்டினார்
 அடி விழுகிறது அப்பாவி மனிதனுக்கு!
 
 கோயில் வாயிலில்
 வணங்கியது யானை
 கழுத்தில் அங்குசம்
 
 சுவிட்சைத் தொட்டதும்
 சீரியல் பேய்கள்
 விடாது கருப்பு
 | 
											
												|  | 
											
											
												| புல்லாங்குழலின் இசைத் துளைகளில்
 என்ன தேடுகிறாய் காற்றே?
 
 கவிதையின் கெளரவம்
 அறிந்திருக்கிறது கழுதை
 மெல்ல அசைபோடும் வாய்!
 இடித்துத் தகர்க்கப்பட்டது
 சர்ச்சின் கதவு
 
 ‘தட்டுங்கள் திறக்கப்படும்’!
 கவலையோடு கவலை சேர்த்தது
 சற்றுப் பொறுத்து மறைந்திருக்கலாம்
 வானவில்!
 
 அ. உமர் பாரூக்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 எச்சம்
 வர்ண சிநேகிதம்
 ஜன்னல் மனிதர்கள்
 விளையாட்டு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |