|  | 
											
											
												|  | 
                                            
											
											
												|  நம்மில் பலரும் அலுவலகம் விட்டு வீடு கிளம்பும் சமயம் கடைசியாக கணினியில் செய்யும் வேலை ctrl+alt+delete பொத்தான்களை ஒருசேர அழுத்திவிட்டு ஆனந்தமாகவோ களைப்பாகவோ வீடு செல்வதுதான். அப்படியானால் உங்கள் கணினி எப்போதும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றது. 
 ஒரு சாதாரண கணினி உறங்கு நிலையில் (sleeping mode) பயன்படுத்தும் மின்சக்தி 35 வாட். இதன் அடிப்படையில் ஒரு சிறிய கணக்கு போடுவோம்.
 
 ஒரு வாரத்திற்கு 24 x 7 = 168 மணி. இதில் 68 மணி நேரம் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம். அப்படியானால் 100 மணி நேரம் கணினி உறங்குநிலையில் இருக்கின்றது. ஒரு மாதத்துக்கு 100 x 4 = 400 மணி நேரம்.
 
 மத்தியதர கணினி நிறுவனத்தில் (250 கணினிகள் இருக்கும் பட்சத்தில்) 250 x 400 = 100,000 மணி நேரம் உறங்குநிலையில் இருக்கின்றது. ஆக ஒரு மாதத்தில் வீணடிக் கப்படும் மின்சக்தி 100000 x 35 = 3,500,000; அதாவது 3500 கிலோவாட். ஒரு கிலோவாட் என்பது ஒரு யூனிட். ஒரு யூனிட்டுக்கு 6 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் 21,000 ரூபாய் வீணாகிறது.
 | 
											
												|  | 
											
											
												| இதில் பணம் வீணாவதைவிட மின்சக்தி வீணாவது தான் வேதனையான விஷயம். இதே நிலை நீடித்தால் மின்சாரத்தின் விலை வேகமாக ஏறும். ஒரு நாள் என்ன விலை கொடுத்தாலும் மின்சாரம் கிட்டாத நிலையும் ஏற்படலாம். அது மட்டுமல்ல, தேவையற்ற செயல்களுக்கு மின்சாரத்தை விரயமாக்கி னால், அது அதிகம் தேவைப்படும் தொழிற் சாலைகள், விவசாயம் ஆகியவற்றுக்குக் கிடைக்காமல் போகலாம். 
 தினமும் வீட்டுக்குக் கிளம்புமுன் ஒரு நிமிடம் காத்திருந்து கணினியை நிறுத்திவிட்டுச் செல்லுங்கள். நம்மால் நாட்டுக்கும் நிறுவனத்துக்கும் முடிந்த உதவி. Switch off Something (SOS) என்பது வீட்டிலும் கடைப்பிடிக்கத் தக்கதே.
 
 கவிதா பிரகாஷ்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |