|
| விஷ்ணுபுரம் விருதுகள் |
   |
- | நவம்பர் 2025 |![]() |
|
|
|
|
 |
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத படைப்பாளிகளை கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கி வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் விக்கிரமாதித்யன், சாருநிவேதிதா, யுவன் சந்திரசேகர், இரா. முருகன் போன்றோர் விஷ்ணுபுரம் இலக்கிய விருது பெற்றுள்ளனர். இந்த ஆண்டுக்கான (2025) விருதுக்கு எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், விருது பெறும் முன்பே அவர் காலமானார்.
அதனால் ரமேஷ் பிரேதனின் இலக்கியச் செயல்பாட்டை கௌரவிக்கும் வகையிலும், அவரது நினைவைப் போற்றும் வகையிலும் கீழ்க்காணும் இளம் எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஐவருக்கு இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு விருதும் ரூபாய் ஒரு லட்சமும், சிற்பமும் அடங்கியது
எழுத்தாளர் தேவி லிங்கம்: தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். நெருப்பு ஓடு நாவலும் கிளிச்சிறை சிறுகதைத் தொகுதியும் இவரது கவனிக்கப்பட்ட படைப்புகள்.
எழுத்தாளர் சஜு: குறிப்பிடத்தகுந்த நாட்டாரியல் ஆய்வாளர். கவிஞரும் கூட. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் நாட்டார் தெய்வம், கலைகள் சார்ந்த ஆய்வுகள் நிகழ்த்தி வருகிறார். நாட்டுப்புறத் தாளவாத்தியக் கலைஞராகவும் செயல்டுகிறார்.
செல்வகுமார் பேச்சிமுத்து: எழுத்தாளர். சிறுகதைகள், நாவல் எழுதி வருகிறார். திரைப்பட நடிகராக முயன்று வருகிறார்.
அசோக் ராம்ராஜ்: எழுத்தாளர். சிறுகதை ஆசிரியர். தமிழ்ச் சிற்றிதழ்களில் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார்.
அழகிய மணவாளன்: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். செவ்வியல் கலை ஆர்வலராகவும் அறியப்படுகிறார்.
பரிசு பெறுபவர்கள் பற்றிய விரிவான ஆவணப்படத்துடன் அவர்களது வாழ்க்கை, படைப்பு பற்றிய புத்தகங்களும் வெளியிடப்படுவது இந்த விருதின் சிறப்பம்சம். |
|
|
| விருதாளர்களுக்குத் தென்றலின் நல்வாழ்த்துக்கள். |
|
|
|
|
|
|
|
|
|
|