|  | 
											
											
												| 
                                                        
	                                                        | 'குறளரசர்' செந்தில் துரைசாமி |    |  
	                                                        | - சின்னமணி ![]() | ![]() மார்ச் 2018 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| டாலஸில் ஜனவரி 27 அன்று நடைபெற்ற திருக்குறள் போட்டியில் 1330 குறட்பாக்களையும் பொருளோடு கூறி, திரு. செந்தில் துரைசாமி அமெரிக்காவின் முதல் 'குறளரசர்' என்ற சிறப்பைப் பெற்றார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில்  நடைபெறும் இந்தப் போட்டிகளில் பெரியவர்களுக்கான போட்டி 2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. அனைத்துக் குறட்பாக்களையும் பொருளுடன் சொல்லி 2014ல் கீதா அருணாசலம் குறளரசியானார். 2016ம் ஆண்டு முனைவர் சித்ரா மகேஷ் இந்தச் சாதனையைப் படைத்தார். அடுத்த ஆண்டில் சீதா ராமசாமி, ஒரு பள்ளி மாணவியாகச் சாதனை படைத்தார். 
 இந்த ஆண்டுப் போட்டிகளில் செந்தில் துரைசாமியின் மனைவி, மகன், மகள் அனைவரும் திருக்குறள் போட்டியில் பங்கேற்றது குறிப்பிட்டுப் பாராட்டத்தக்கது.
 
 தந்தை தமிழாசிரியர் என்பதால் சிறுவயது முதலே குறள்மீது ஆர்வம் உண்டு. தந்தையின் தூண்டுதலால் கோப்பல் தமிழ்ப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்ற ஆர்வம் ஏற்பட்டது. "இது ஒரு மிகப்பெரிய அனுபவமாகும். அனைவரும் இயன்ற அளவு திருக்குறள் படிக்க வேண்டும்" என்று செந்தில் குறிப்பிட்டார்.
 | 
											
												|  | 
											
											
												| சின்னமணி, டாலஸ், டெக்சஸ்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |