|  | 
											
											
												| 
                                                        
	                                                        | முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் |    |  
	                                                        | - ![]() | ![]() பிப்ரவரி 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு ராமஸ்வாமி வெங்கடராமன் ஜனவரி 27, 2009 அன்று புதுடில்லியில் மரணமடைந்தார். அவருக்கு வயது 98. டிசம்பர் 4, 1910 அன்று பிறந்த வெங்கடராமன் 1987 முதல் 1992 வரை பாரதத்தின் முதற்குடிமகனாக இருந்தார். ஏறக்குறைய 4 ஆண்டுகள் உபஜனாதிபதியாகவும் இருந்துள்ளார். தவிர மத்திய நிதியமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் ஆகிய பதவிகளைத் திறம்பட வகித்துள்ளார். 
 ஜனவரி 12 அன்று சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வெங்கடராமன்.
 
 தேசபக்தரும் துணிச்சல் மிக்க அரசியல்வாதியுமான வெங்கடராமன் அவர்களுக்குத் தென்றல் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது.
 
 *****
 | 
											
												|  | 
											
											
												|  டாக்டர் லலிதா ராமமூர்த்தி, சிகாகோ 
 ஜனவரி 6, 2009. சிகாகோவில் மருத்துவத் துறையில் பணிபுரிந்து வந்த டாக்டர் லலிதா ராமமூர்த்தி (59) இறையடி சேர்ந்தார். தியாகராஜ உற்சவம் அமைப்பிலும் லலிதா தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். அவரை இழந்து வருந்து கணவர் டாக்டர் சுப்ரமணியம் ராமமூர்த்தி, மகன்கள் சந்தோஷ், வசந்த் ஆகியோருக்கு தென்றல் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
 
 தகவல் உதவி: கோமதி சுவாமிநாதன், சிகாகோ
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |