|  | 
											
											
												| 
                                                        
	                                                        | பத்மபூஷண் டாக்டர் வை. கணபதி ஸ்தபதி |    |  
	                                                        | - ![]() | ![]() அக்டோபர் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| சிற்பக் கலைப் பிதாமகரும், உலககெங்கிலும் பல ஆலயங்களை, புகழ்பெற்ற கட்டிடங்களையும் நிர்மாணித்தவருமான டாக்டர் வை. கணபதி ஸ்தபதி (84) சென்னையில், செப்டம்பர் 6, 2011 அன்று காலமானார். தேவகோட்டை வைத்தியநாத ஸ்தபதியின் மகனாகப் பிறந்த கணபதி ஸ்தபதி இளவயதிலேயே தந்தையிடமிருந்து சிற்ப நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். பழனி முருகன் ஆலயத்தின் தலைமை ஸ்தபதியாக இருந்தவர் பின்னர் சென்னை மகாபலிபுரம் சிற்பக் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். உலகளாவிய அளவில் தென்னிந்தியச் சிற்பக் கலையைக் கொண்டு சேர்த்தார். அமெரிக்கா, டென்மார்க், ரஷ்யா, ஜப்பான், சீனா என உலகெங்கிலுமிருந்தும் வந்த மாணவர்கள் அவரிடம் சிற்ப நுணுக்கங்களைக் கற்றனர். பகவான் ரமணர் மற்றும் காஞ்சி மகா பெரியவரின் பரிபூரண ஆசி பெற்றிருந்த கணபதி ஸ்தபதி, மகாபெரியவரின் தலைமையில் பல 'சதஸ்'களை நிகழ்த்தியிருக்கிறார். வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் வானளாவி நிற்கும் திருவள்ளுவர் சிலையும், ஹவாய் தீவின் சிவாலயமும், வாஷிங்டனின் சிவ-விஷ்ணு ஆலயமும் என்றும் அவர் பெயர்சொல்லும். 
 டாக்டர் வை. கணபதி ஸ்தபதி அவர்கள் தென்றலுக்குக் கொடுத்த மிகச் சுவையான நேர்காணல்
 | 
											
												|  | 
											
											
												| 
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |