|  | 
											
											
												| 
                                                        
	                                                        | தமிழ்க் கிறிஸ்தவ ஐக்கியக் குழுவின் கிறிஸ்துமஸ் ஆராதனை |    |  
	                                                        | - ஜான் டேவிட் ![]() | ![]() பிப்ரவரி 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| நார்த் ரிட்ஜ் மெத்தடிஸ்த ஆலயத்தில் டிசம்பர் 20ம் நாளன்று மாலை தமிழ்க் கிறிஸ்தவ ஐக்கியக் குழுவின் கிறிஸ்துமஸ் ஆராதனை நடந்தேறியது. 
 ராஜ் முனுவும், ரவி ராசையாவும் இசைக்கருவிகளை வாசிக்க, நத்தார் (கிறிஸ்துமஸ்) பாடல்களைச் சபையோர் பாடி ஆராதனையைத் தொடங்கினர். அருள்திரு டாக்டர் சாம் கமலேசன் ஆரம்ப ஜபம் செய்தார்கள். ஆராதனையின் விசேடப் பாடலை தயாளன் செல்வரட்ணம், ரவி ராசையா ஆகியோர் பாடினர்.
 
 நற்செய்தி வழங்கிய அருள்திரு பிரேம்குமார் கிறிஸ்து பிறந்த நாளின் உயர்வை எடுத்துச் சொன்னார்.
 
 ஆராதனையின் முக்கிய நிகழ்ச்சியாகத் திருமணப் பொன்விழா காணும் அருள்திரு கமலேசன் மற்றும் அவரது துணைவியாருக்கு நினைவுக் கேடயம் வழங்கிக் கௌரவித்தனர். பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியருக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. ஆராதனை கூட்டாஞ்சோறு விருந்தோடு நிறைவெய்தியது.
 
 மேலும் விபரங்களுக்கு: www.ourchurch.com/member/t/TamilChristian
 மின்னஞ்சல்: tamilchristianfellowship@ourchurch.com
 | 
											
												|  | 
											
											
												| எஸ். ஜான் டேவிட் | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |