Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
பிரசாத் ரெட்டி காடம்ரெட்டிக்கு 'சங்கர ரத்னா' விருது
- |அக்டோபர் 2026|
Share:
சென்னை, சங்கர நேத்ராலயாவின் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்துவதில் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் சமூகநலப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, டெக்சஸை தலைமையகமாகக் கொண்ட 'ட்விஸ்டட் எக்ஸ்' (Twisted X Inc.) நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் (CEO), சங்கர நேத்ராலயா (அமெரிக்கா)வின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான திரு பிரசாத் ரெட்டி காடம்ரெட்டி அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான 'சங்கர ரத்னா' விருது வழங்கப்பட்டது.

விருதை முன்னாள் பாரதக் குடியரசு துணைத்தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, செப்டம்பர் 25, 2026 வெள்ளிக்கிழமையன்று சென்னை சங்கர நேத்ராலயாவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

அமெரிக்காவில் வசிக்கும் மக்கள் பாரதத்தின் தொண்டுப் பணிகளுக்கு ஆதரவளிப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகத் திரு வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு முழுமையான இலவச சேவைகளை வழங்கி வரும் சங்கர நேத்ராலயாவின் பணிகளை அவர் பாராட்டினார்.

சங்கர ரத்னா விருது
சங்கர நேத்ராலயாவின் வளர்ச்சிக்குத் தன்னலம் கருதாமல் துணை நிற்கும் தகைசால் ஆளுமைகளை, மருத்துவமனையின் குறிக்கோள் மற்றும் கொள்கைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய தனிநபர்களை கௌரவிக்கும் விதமாக நிறுவனத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2002-ஆம் ஆண்டில் முதல் 'சங்கர ரத்னா' விருது, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் மும்பை தென்னிந்திய கல்வி சங்கத்தின் அறங்காவலர் திரு வி. சங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்விலேயே சங்கர நேத்ராலயாவின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களுக்கு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 'நேத்ர சேவா ரத்னா' விருது வழங்கியதும் நினைவுகூரத் தக்கது.



திரு பிரசாத் ரெட்டி காடம் ரெட்டி ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கலிவேலபாலம் கிராமத்தில் பிறந்தவர். காக்கிநாடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்காவிற்குச் சென்று வணிக வாழ்க்கையைக் கட்டமைத்த அவர், 'ட்விஸ்டட் எக்ஸ்' நிறுவனத்தை ஒரு உலகளாவிய காலணி (footwear) பிராண்டாக உயர்த்தினார். அவர் சுகாதாரம், கல்வி, குழந்தைகள் நலன், முதியோர் பராமரிப்பு மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய சமூக நலம் சார்ந்த துறைகளின் தனது ஆதரவை வழங்கியதோடு, சங்கர நேத்ராலயாவின் பிதாமகர் பத்மபூஷண் டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத் அவர்களின் கனவுத்திட்டமான, மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள சமூகங்களுக்குக் கண் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், தொடங்கிய நடமாடும் கண் அறுவை சிகிச்சை பிரிவை (MESU) நிறுவுவதற்கு ஆதரவளித்து, கண் மருத்துவ அறுவை சிகிச்சை முகாம்களை நடத்துவதற்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.

செப்டம்பர் 25, 2026 அன்று நடைபெற்ற சிறப்பு விழாவில், கார்னியா சேவைகள் பிரிவின் சிறப்பு மூத்த ஆலோசகர் டாக்டர் பிரேமா பத்மநாபன் வரவேற்புரை நல்கினார். சங்கர நேத்ராலயாவின் மேலாண்மை வாரியக்குழுத் தலைவரும் செயல் மருத்துவ இயக்குநருமான டாக்டர் கிரிஷ் சிவா ராவ் மற்றும் தலைவர் டாக்டர் டி.எஸ். சுரேந்திரன் ஆகியோர், இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதியும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருமான திரு வெங்கையா நாயுடுவை கௌரவித்தனர்.

சங்கர நேத்ராலயா (USA) அமைப்பின் தலைவர் திரு பாலா ரெட்டி இந்துர்த்தியை, பார்வை ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் ரோனி ஜார்ஜ் கௌரவித்தார்.



திரு பிரசாத் ரெட்டி தனது ஏற்புரைக்குப் பிறகு, சங்கர நேத்ராலயாவின் சமூக சேவைகளுக்காக 1,00,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான காசோலையை நன்கொடையாக வழங்கினார்.

அறக்கட்டளையின் கௌரவச் செயலாளர் திரு. ஜி. ராமச்சந்திரன் நன்றியுரை வழங்கினார்.

மேலும் தகவல்களுக்கு அல்லது நன்கொடை அளிக்க, இணையதளம்: www.sankaranethralayausa.org
தொலைபேசி: (855) 463-8472

வரிவிலக்கு பெறக்கூடிய நன்கொடைகளை (வரிவிலக்கு அடையாள எண்: 52-1611548) பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம்: Sankara Nethralaya USA, 7238 Muncaster Mill Rd, No. 522, Derwood, MD 20855
முனைவர் அ.போ. இருங்கோவேள்,
சங்கர நேத்ராலயா, சென்னை, இந்தியா.
Share: 




© Copyright 2020 Tamilonline