| தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா மருத்துவத் துறையினருக்கு இலவச யோக, தியானப் பயிற்சி
 Panel discussion on the Coronavirus pandemic
 Insights into choreography
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஹூஸ்டன் தமிழ் இருக்கை: அருஷி நிஷாங்க் வருகை. |    |  
	                                                        | - சாம் கண்ணப்பன் ![]() | ![]() மே 2020 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
	|  | 
											
												| இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரீ ரமேஷ் போக்ரியலின் மகள் திருமதி அருஷி நிஷாங்க் பந்த், ஹூஸ்டன் தமிழ் ஆய்வுத் தலைவரின் (H.T.S.C.) அழைப்பின் பேரில் 2020 மார்ச் 3ம் தேதி ஹூஸ்டனுக்கு வருகை தந்தார். அவருடன் அவரது கணவர் திரு அபிநவ் பந்த், டாக்டர் விஜய் பிரபாகர் மற்றும் சிகாகோவைச் சேர்ந்த திருமதி சந்தோஷ்குமார் ஆகியோர் வந்திருந்தனர். அவருக்கு 'ஹூஸ்டன் தமிழ் ஆய்வுத் தலைவரின் பண்பாட்டுத் தூதர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பதன் நோக்கம் குறித்து அவர் இந்திய மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பதுடன், இந்தியாவில் இதற்கு நிதி திரட்டவும் உதவுவார். 
 இந்தத் தமிழ் இருக்கை நிறுவுவதற்கென டெக்சஸ் லாபநோக்கற்ற 501 (c) (3) வரிவிலக்குப் பெற்ற அமைப்பாக 2018ல் H.T.S.C. நிறுவப்பட்டது. தமிழக அரசின் ஒரு கோடி ரூபாய் நன்கொடையுடன், தனிநபர் நன்கொடைகள் மற்றும் உறுதிமொழிகள் என அரை மில்லியன் தொகையை எட்டியுள்ளது. 2 மில்லியன் இலக்கை நோக்கிப் பணி நடைபெறுகிறது.
 
 இந்த அமெரிக்க பயணத்தின்போது சிகாகோவில் 'சிறந்த 20 உலகளாவிய பெண்கள்' விருதை அருஷி பெற்றார். அருஷி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதோடு திறமையான கதக் நடனக் கலைஞரும் ஆவார்.
 
 அருஷிக்கு ஹூஸ்டன் மீனாட்சி திருக்கோயிலில் வரவேற்பை H.T.S.C. நடத்தியது, இதில் பியர்லாந்து மேயர் மேதகு டாம் ரீட், தலைவர் தானி கண்ணன், செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் பார்கவி கோல்லா இவர்களுடன் கோயில் பூசகர்கள், ஹூஸ்டன் தமிழ்நாடு அறக்கட்டளை தலைவர் மாலா கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜன் ராதாகிருஷ்ணன், அபிராமி கண்ணப்பன் ஆகியோர் விருந்தினர்களைப் பாராட்டினர்.
 | 
											
												|  | 
											
											
												| அருஷி தமது ஏற்புரையில் ஸ்பர்ஷ் கங்கா திட்டத்தில் தனது தலைமை குறித்துப் பேசியதோடு, ஸ்பர்ஷ் கங்கா அபியன் திட்டத்தின் ஹூஸ்டன் தலைவராக இருக்கும்படி சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன் அவர்களைக் கேட்டுக்கொண்டார். 
 மேலும் தகவலுக்கு மின்னஞ்சல் அனுப்புக:
 சாம் கண்ணப்பன் - sam.kannappan@gmail.com
 
 சாம் கண்ணப்பன்,
 ஹூஸ்டன், டெக்சஸ்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழா
 மருத்துவத் துறையினருக்கு இலவச யோக, தியானப் பயிற்சி
 Panel discussion on the Coronavirus pandemic
 Insights into choreography
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |